36. மெய் யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (351)
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்க உணர்வினால் சிறந்த வீடுபேறு இன்றி இழிந்த பிறவியே உண்டாம்.
இருள்நீங்கி யின்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352)
மயக்கம் நீங்கித் தூய அறிவை அடைந்தோர்க்கு, அத்தூய அறிவு நரகத் துன்பத் திற்கு ஏதுவான பிறப்பை நீக்கி வீட்டின்பத்தை நல்கும்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. (353)
பல கவர்பட்ட ஐயம் நீங்கி மெய்யறிவு பெற்றார்க்குத் தாம் இருக்கும் நிலவுலகத் தினும் வீட்டுலகம் நெருங்கியதாம்.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. (354)
மெய்யறிவைப் பெறாதவர்க்கு, புலன்களால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் திரும்பித் தமக்கு வயப்பட்ட விடத்தும், அதனாற் பயனில்லையாம்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (355)
காட்சியுங் கருத்துமாகிய எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மையான இயல்பை அல்லது கருத்தை அறிந்து கொள்வதே மெய்யறிவாகும்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356)
இம்மை மக்கட் பிறப்பில் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் பட்டறிவுள்ள மெய்யோதியரால் செவியறிவுறுத்தப் பெற்றும் மெய்ப்பொருள் உணர்ந்தவர் மீண்டு இப்பிறப்பின்கண் வராத வழியைப் பெறுவர். (ஓதியர்-ஞானியர்).
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357)
மெய்யோதியர்பாற் கேட்ட செவியறிவுறுத்தப் பொருளை ஓர் ஓகியின் உள்ளம் உத்தியானும் அளவைகளானும் தெளிய ஆராய்ந்து உண்மைப் பொருளை உணருமாயின் அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதாக நினைக்க வேண்டிய தில்லை. (ஓகி-யோகி)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு. (358)
பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை கெட, வீட்டிற்கு வினைமுதற் கரணகம் (நிமித்த காரணம்) ஆகிய செவ்விய பொருளை அறிவதே ஓகியர்க்கு அறிவாவது.
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். (359)
வீடுபெற முயல்பவன் எல்லாப் பொருட்குஞ் சார்பான செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றும் நீங்க ஒழுக வல்லனாயின் அவனை முன்பு சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணவர்வு ஒழுக்கங்களைக் கெடுத்துப் பின்பு சாரமாட்டா.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய். (360)
ஓக வொழுக்கத்தில் முதிர்ந்தவர்க்கு விருப்பு, வெறுப்பு, அறியாமை என்னும் இக்குற்றங்கள் மூன்றும் தம் பெயருங் கூடத் தோன்றாவாறு முற்றக் கெடுதலால் அவற்றின் விளைவாகிய வினைப்பயன்களும் அறவே கெடும்.

No comments:
Post a Comment