51. தெரிந்து தெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். (501)
அரசனால் ஆட்சித்துணை அதிகாரியாக அமர்த்தப்படுவன் அறமும் பொருளும் இன்பமும் உயிர்க்கெடு பற்றிய அச்சமும் ஆகிய நான்கு தேர்திறத்தால் மனப் பான்மை ஆராய்ந்து தெளியப் படுவான்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு. (502)
ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து நடுநிலையின்மை, விரைமதி யின்மை, அன்பின்மை, மடி, மறதி, முதலியவற்றொடு ஐவகையும் அறு வகையுமான குற்றங் களினின்று நீங்கி, தமக்குப் பழி வந்து விடுமோ என்று அஞ்சும் நாண் உடைய வனிடத்தே அரசனது தெளிவு.
அரியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. (503)
அரும் பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையும் ஆகிய குற்றங்களை நீங்கியவரிடத்தும் நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவும் இல்லாமை காண்பது அரிதே.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (504)
குணமுங் குற்றமும் ஆகிய இரண்டும் உடையாரே உலகத்தில் இருந்தலால், ஒருவன் குணங்களை முதலிய ஆராய்ந்து, அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து, மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை இன்மையைத் துணிக.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (505)
மக்கள் அறிவாற்றல் கணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக் கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாய் இருப்பது. அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. (506)
மகப்பேறும் உறவினரும் இல்லாதவரை வினைத் தலைவராகத் தெளிதலை விட்டு விடுக. அவர் வேறு தொடர்பில்லாதவர் ஆதலால் பழிக்கு அஞ்சார்.
காதன்மை கந்தா அறிவறியார்த தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். (507)
பேரன்பு உடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு, தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறியாதாரைத் தெளிந்து அமர்த்துதல், அரசனுக்கு அறியாமை யால் விளையுந் தீங்குகள் பலவற்றையும் உண்டாக்கும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். (508)
தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைத் கொடுக்கும்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். (509)
எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க. ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரை நம்பி அவரிடம் ஒப்படைக் கக் கூடிய வினை களைப் பற்றி ஐயுறற்க.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். (510)
அரசன், ஒருவனை ஆராயாது தெளிதலும் ஒருவனை ஆராய்ந்து தெளிந்த பின் அவனைப் பற்றி ஐயுறலும் ஆகிய இவ்விரண்டும் அவனுக்கு நீங்காத துன்பத்தை விளைக்கும்.

No comments:
Post a Comment