119. பசப்புறு பருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற? (1181)
என்னை விரும்பியவர்க்கு அன்று பிரிவை உடம்பட்ட நான் அதனை ஆற்றாது இன்று பசந்த என் இயல்பை யார்க்கு எடுத்துச் சொல்வேன்!
அவர்தந்தார் என்னுந் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. (1182)
இப்பசலைதான் ‘என்னை உருவாக்கினவர் அவர் (காதலர்)’ என்னும் பெருமிதத் தால் என் உடம்பின்மேல் ஏறி என்னைச் செலுத்துகின்றது.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து. (1183)
நம் காதலர் நம்மைவிட்டுப் பிரியும்போதே இக்காம நோயையும் பசலை யையும் எதிரீடாகத் தந்துவிட்டு என் மேனி அழகையும் நாணையும் தம் முடன் கொண்டு போய் விட்டார்.
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. (1184)
காதலர் சொற்களை யான் மிகுதியும் நினைப்பேன். யாரிடத்திலும் சொல் லுவதும் அவர் நற்றிறங்களையே, அங்ஙனம் இருந்தும் எப்படியோ இப் பசலை கள்ளத் தனமாக வந்துள்ளது.
உவக்காணெங் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது. (1185)
முன்பு நம் காதலர் உதோ உந்த இடத்திற்குத்தான் செல்வார். அதற்குள் இங்கே என் உடம்பெல்லாம் பசலை படர்ந்துவிடும்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
விளக்கின் அவிவு பார்த்து உடனே வரக் காத்திருக்கும் இருளைப் போலவே தலைவரின் தழுவல் நெகிழ்வு பார்த்து உடனே வரக்காத் திருக்கும் இப்பசலை.
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் இவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187)
முன்பு ஒருநாள் காதலரைத் தழுவிக் கிடந்த நான் அறியாது ஒரு சிறிது தள்ளிப் படுத்தேன். அங்ஙனம் படுத்த அளவில் அள்ளிக்கொள்ளும் அள வாகப் பசலை வந்து திரண்டுவிட்டது.
பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல். (1188)
இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலைகொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது, இவளை அவர் கைவிட்டுவிட்டுப் போய்விட் டார் என்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்து ஒருவருமில்லை.
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். (1189)
இப்பிரிவிற்கு யான் உடன்படும்வகை பசப்பியவர் இன்று உன் கருத்துப் படி குற்றம் அற்றவராயின் என் மேனி இன்று பசந்தபடியே பசக்க.
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். (1190)
பிரிவிற்கு உடம்படச்செய்த காதலா இன்று வந்து கூடாமையை நட்டோர் பழியாராயின் பசலை அடைந்தாள் என்று வேற்றுமைப்படச் சொல்லப் படாது, பசலையே ஆனாள் என்று ஒற்றுமைப்படச் சொல்லப்பெறுதலும் நல்லதேயாம்.

No comments:
Post a Comment