77. படைமாட்சி
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை. (761)
தேர், யானை, குதிரை, காலாள் ஆகிய நால்வகை உறுப்புக்களும் பொருந் திப் போரின்கண் புண்படுவதற்கும் சாதற்கும் அஞ்சாது பொருது பகை வரை வெல்லத் தக்க படை அரசனின் செல்வங்கள் எல்லாவற்றுள்ளுந் தலையாயதாம்.
உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. (762)
நீண்ட நேரம் பொருது களைத்த விடத்தும் தோல்வி நேர்ந்தால் மேல் நேரக்கூடிய வற்றிற்கெல்லாம் அஞ்சாது நின்று பொரும் கடுமறம் அர சர்க்கு வழிவழியாகத் தொடர்ந்து வரும் நிலைப் படைக்கு அல்லாமல் வேறுவகைப் படைக்கு உண்டாகாது.
ஒலித்தக்கால் என்னாம் உவரி? எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (763)
எலியாகிய பகை பொருந்திரளாகக் கூடிக் கடல் போல் ஆரவாரித்தாலும் பாம்பிற்கு என்ன தீங்கு நேரும்! அப்பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே அப்பகை ஒருங்கே அழிந்துபோம்.
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வண்க ணதுவே படை. (764)
போரின்கண் தோல்வி அடைதலின்றிப் பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப்படாத தாய்த் தொன்று தொட்டுத் தலைமுறைத் தலை முறை யாக வளர்ந்து வந்த வன்மறத்தை உடையதே சிறந்த படையாவது.
கூற்றுடன்று மேல்வரினினுங் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. (765)
இறப்புத் தெய்வமாகிய கூற்றுவனே சினந்து வந்து தாக்கினும் கலையாது எதிர்த்து நின்று பொரும் வலிமை உடையதே சிறந்த படையாவது.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. (766)
தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே படைக்கு அரணான பண்புகளாம்.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. (767)
பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகை யறிந்து, அதற்கு ஏற்பத் தன்னை வகுத்து கொண்டு பகைவர் தூசிப் படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன்மேற் சென்று தாக்கு வதே சிறந்த படை யாவது.
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். (768)
படை, பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கு இல்லாவிடினும் தன் தோற்றப் பொலி வாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமைபெறும்.
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. (769)
வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத வெறுப்பும் ஏழைமையும் தனக்கு இல்லாவிடின் படை பகைவரை பெருமைபெறும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். (770)
போரிற் பின்வாங்காது நிலைத்து நிற்கும் மறவரை மிகுதியாகக் கொண்டி ருப்பினும் தனக்குத் தலைவராகிய வயவர் (வீரர்) இல்லாவிடத்துப் படை நிற்காது.

No comments:
Post a Comment