ஊழியல்
38. ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (371)
ஒருவன் கையிற் பொருள் சேர்தற்குக் கரணகமான நல்லூழால் முயற்சி உண்டாகும். அவன் கையிலுள்ள பொருள் தீர்தற்குக் கரணகமான தீயூழாற் சோம்பல் உண்டாகும்.
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (372)
ஒருவன் தன் செல்வத்தை இழத்தற்குக் கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்தணைப் பேரறிஞனாய் இருந்தாலும் அவனைப் பேதையாக்கும். இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கு ஏற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாய் இருந்தா லும் அவனைப் பேரறிஞனாக்கும்.
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். (373)
பேதைப்படுத்தும் தீயூமுள்ள ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும் அவனுக்குப் பின்னும் அவ்வூழாகிய பேதைமை யுணர்வே மேற்படும்.
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு. (374)
உலகத்தில் உடைமைபற்றி ஊழினால் உண்டாக்கிய இயற்கை இரு வேறு நிலைமையதாம். செல்வர் ஆதலும் வேறு; தெள்ளிய அறிஞர் ஆதலும் வேறு.
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வஞ் செயற்கு. (375)
செல்வத்தைத் தேடுவதற்குத் தீயூழ் உற்றவிடத்து நல்ல நிலைமைகளெல் லாம் தீயனவாகிய பயன்படாது போம். நுல்லூழ் உற்றவிடத்துத் தீய நிலைமைகளும் நல்லனவாகிப் பயன்படும்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (376)
ஊழால் தமக்கு உரிய வல்லாத பொருட்கள் வருந்திக் காப்பினும் தம் மிடத்து நில்லாவாம். ஊழால் தமக்குரிய பொருள்கள் வெளியே கொண்டு போய்க் கொட்டினும் தம்மைவிட்டு நீங்கா.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது. (377)
ஊழ்த் தெய்வம் அவர்வர்க்கு இன்பதுன்பம் வகுத்த வகைப்படியல்லாமல், கோடிக் கணக்கிற் பொருளை வருந்தி ஈட்டியவர்க்கும் அப்பொருளால் இன்பம் நுகர்தல் உண்டாகாது.
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். (378)
அடைய வேண்டிய துன்பங்களை அடைவிக்காது தீயூழ்கள் நீங்குமாயின் நுகர்ச்சி இல்லாத வறியர் பெரும்பாலும் துறவியராவார்.
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். (379)
நல்வினைப் பயன்களாக்கிய இன்பங்கள் நேருங்கால் அவற்றை நல்லவை என்று முழுமனத்துடன் ஏற்று நுகர்பவர், மற்றத் தீவினைப் பயன்களாக் கிய துன்பங்கள் நேருங்கால் அவற்றையும் அவ்வாறே ஏற்று நுகராது துன்புறுவது ஏனோ?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380)
ஊழைப்போல் மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவையிருக்கின்றன? அதை விலக்குவதற்கு வேறோரு வழியை ஆய்ந்து எண்ணிலும், அவ் வழியே தனக்கு வழியாகக் கொண்டு அது அவ்வெண்ணத்தின் முற்பட்டு வந்து நிற்கும்.

No comments:
Post a Comment