62. ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென் றவாசாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (611)
ஒரு வினை செய்யுமுன் தம்மைச் சிறியவராகக் கருதி அவ்வினை தம்மாற் செய்தற்கு அரிது என்று தளராமை வேண்டும். முயற்சியே அவ்வினை யைச் செய்து முடித்தற்கு ஏற்ற பெருமையைத் தமக்கு உண்டாக்கும்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு. (612)
இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது. ஆதலால், எடுத்துக்கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யாது இருத்தலை ஒழிக.
தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. (613)
எல்லார்க்கும் நன்றி செய்தல் என்னும் பெருமிதம் விடாமுயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம்.
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (614)
விடாமுயற்சி இல்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள் ளுதல், போருக்கு அஞ்சும் பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ள வாளைப் பயன்படுத்தல் போல் இல்செயலாம்.
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண். (615)
தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய் வினை முடித்தலையே விரும்பு கின்றவன் தன் சுற்றமாகிய பொறையின் (பாரத்தின்) வறுமையைப் போக்கி அதைத் தாங்கும் தூணாவன்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)
விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும். அம்முயற்சி இல்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்தி விடும்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். (617)
கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்; திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள் என்று சொல்லுவர் அறிந்தோர்.
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. (618)
மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது. அறிய வேண்டிய வற்றை அறிந்து, செய்ய வேண்டிய வினைகளை விடாமுயற்சி யாடு செய்யாமையே குற்றமாவது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சி தெய்வ ஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றி பெறாது போயினும் அம்முயற்சிக்கு உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன்தரும்; தராமற் போகாது.
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர். (620)
தளர்ச்சியின்றித் தாழ்வற விடாது முயல்பவர் வெல்வதற்கு அரிய ஊழையும் வென்று விடுவர்.

No comments:
Post a Comment