74. நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. (731)
குறையாத விளைபொருளும் தகுதியுள்ள பெரியோரும் கேடில்லாத செல் வம் உடையோரும் முன்கூறப்பட்ட செங்கோல் அரசனோடு சிறந்த அமைச்சனோடு பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.
பெரும்பொருளால் பெட்டக்க தாகி, அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. (732)
பல்வகைப் பொருள் வளமிகுதியாற் பிற நாட்டாராலும் விரும்பப்படுவ தாய், கேடில்லாமையோடுகூடி நானிலச் செல்வமும் மிகுதியாக விளை வதே வறுமை இல்லாத நாடாவது.
பொறையயாருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்(கு)
இறையயாருங்கு நேர்வது நாடு. (733)
பிறர் நாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையும் ஆகிய பொறையயல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி, அதனால், தன் அரச னுக்குச் செலுத்த வேண்டிய பரவுவரி சிறதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பாண்பாட்டிற்கு ஏற்ற) நல்ல நாடா வது.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. (734)
கடும்பசியும் தீரா நோயும் அழிக்கும் பகையும் இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக்கு ஏற்ற) நல்ல நாடாம்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. (735)
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல்வேறு மாறுபாட்டுக் கூட்டங் களும், அரசன் குடும்பத்துள்ளும் குடிகளுள்ளும் இருந்து நாட்டைப் பகை வர்க்குக் காட்டிக் கொடுத்துக் கேடுசெய்யும் அகப்பகைவரும் நாட்டிற்குள் ளிருந்து சமையம் வாய்க்கும் போதெல்லாம் போராலுங் கொள்ளையாலும் அரசனையும் குடிகளையுந் துன்புறுத்தும் அடங்காச் சிற்றரண் தலை வரும் இல்லாததே (அமைதிக்கு ஏற்ற ) நல்லது நாடாவது.
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. (736)
புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை முதலிய இயற்கையாலும், பகை வரும் கொள்ளைக்காரரும் ஆகிய மாந்தராலும், கெடுதல் அறியாததாய் என்றேனும் ஒருகால் அரிதிற் கெட்டதாயினும் வளங் குறையாத நாடே எல்லா நாடுகளுள்ளும் தலையானது என்று கூறுவர் அறிஞர்.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு. (737)
மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர்வளமும், பலவகையிலும் பயன் படுவதற்கு ஏற்றதாய் வாய்ந்த மலையும் அதனின்று வரும் ஆறும் இயற் கையுஞ் ஆகிய இருவகை வலிய அரணும் சிறந்த நாட்டிற்கு உரிய உறுப்புக்களாம்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியயன்ப நாட்டிற்கிவ் வைந்து. (738)
நோயின்மை, செல்வம், விளையுள், இன்பமுண்மை, பாதுகாப்பு ஆகிய இவ் வைந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வர் அறிஞர்.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு. (739)
நாடென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பிறநாட்டுப் பொருள்களின் தேவை யின்றித் தமக்கு வேண்டிய பொருள் வளமெல்லாம் தம்மகத்தே கொண்டன. இங்ஙனமின்றிப் பிறநாட்டுப் பொருள்களை நாடிப்பெற்று அதனால் வளம்பெறும் நாடுகள் நாடுகளாகா.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. (740)
அரசனோடு பொருந்துதலை இல்லாத நாடு மேற்கூறியவாறு எல்லா நலங்களும் அமைந்திருந்ததாயினும் அவற்றாற் பயன் இல்லாததேயாகும்.

No comments:
Post a Comment