56. கொடுங்கோன்மை
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலைமேற்கொண்(டு)
அல்லவை செய்தொழுகும் வேந்து. (551)
பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறை யல்லா தவற்றைச் செய்தொழுகும் வேந்தன் பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண்டொழுகுவாரினுங் கொடியனேயாவன்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (552)
கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியயாடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல், கொல்லும் வேலை ஏந்தி நின்ற வழிப்பறிக் கள்வன் வழிச் செல்வானை நோக்கி உன் கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வ தனோடொக்கும்.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும். (553)
தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப முறை செய்யாத அரசன் நாள்தொறும் நாடு இழப்பான்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. (554)
தன் குடிகட்கு நன்மையையும் தன் தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசன் தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)
குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப் பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம்.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னவாம் மன்னர்க் கொளி. (556)
அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோல் ஆட்சியினாலேயே. அச்செங்கோல் ஆட்சி இல்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற் போம்.
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. (557)
மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்த கையதோ அத்தகையதே, அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும்.
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். (558)
முறை(நீதி) செய்யாத அரசனின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழின், இன்பந்தர வேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமை யினும் துன்பமானதாம்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (559)
அரசன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் அவன் நாட்டிற் பருவமழை தவறுதலால் வானம் பொழிதலைச் செய்யாது.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின். (560)
காத்தற்கு உரிய அரசன் குடிகளையும் அவர்கட்குப் பயன்படும் உயிரி களையும் காவானாயின் அவன் நாட்டு ஆக்களும் பல குன்றும் அறு வகைத் தொழில் செய்வோரும் தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்.

No comments:
Post a Comment