55. செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (541)
தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து, எவரிடத்தும் சிறப்பாக அன்பு கொள்ளாது, நடுநிலை பொருந்தி, அக்குற்றங்கட்கு ஏற்ற தண்ட னைகளை அறநூல் அறிஞரொடு நூல் உத்தி பட்டறிவொடு பொருந்தத் தீர்மானித்து அவற்றை நிறைவேற்றுவதே செங்கோல் முறையாம்.
வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி. (542)
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும். ஆயினும், குடிகள் எல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழ்வர்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாய் இருப்பது அரசனின் செங்கோலே.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (544)
தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனு டைய அடிகளை நாடு முழுவதும் விடாது பற்றி நிற்கும்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (545)
பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு, முறைப்படி செங்கோல் ஆட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின். (546)
அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று, அவன் அர சாட்சியே. அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறி தவறாதிருந்த பொழுதே.
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (547)
உலகம் முழுவதையும் அரசன் காப்பான். முட்டுபாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தால் தானே கெடும். (548)
முறை (நியாயம்) வேண்டியனவர்க்குக் காட்சிக்கு எளியனாய் இருந்து, அவர் சொல்லியவற்றை அறநூல் அறிஞருடன் ஆராய்ந்து, உண்மைக்கு ஏற்பத் தீர்ப்பு செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். (549)
தான் குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வருத்தாது பேணி, அவர் குற்றஞ் செய்யின் அதைத் தண்டனையால் நீக்குதல் அரசனின் குற்றமன்று, அவன் கடமையாம்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (550)
அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து நல்லோரைக் காத்தல், உழவன் களைகளை களைந்து பசும்பயிர்களைக் காத்தலோடொக்கும்.

No comments:
Post a Comment