121. நினைந்தவர் புலம்பல்
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினுங் காமம் இனிது. (1201)
முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும், அன்றே பெற்றார்போல் நீங்காத பெருமகிழ்ச்சியைத் தருதலால் உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினுங் காமம் இன்பந் தருவதாய் உள்ளது.
எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில். (1202)
தம்மாற் காதலிக்கப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைத் தவர்க்குப் பிரிவினால் வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லாமற் போய் விடுகின்றது. அதனாற் காமம் எத்துணையேனும் இன்பந் தருவதொன்றே காண்.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். (1203)
எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றி அடங்கி விடுகின்றது. ஆத லால், காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது விட்டு விடுகின்றார் போலும்!
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெம்நெஞ்சத்(து)
ஓஒ உளரே அவர். (1204)
எம்முடைய உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கின்றாரே! அதுபோல யாமும் அவர் உள்ளத்தில் இருக்கின்றேமோ, இல்லேமோ? தெரியவில் லையே!
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல். (1205)
தம்முடைய உள்ளத்தின்கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்து கொண்ட காதலர், தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருதற்கு நாணாரோ?
மற்றியான் என்னுள்ளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன். (1206)
யான் அவரோடு கூடியகாலை இன்பத்தை இடைவிடாது நினைத்த லாலேயே இன்று இறந்துபடாது இருக்கின்றேன். வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்?
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளஞ் சுடும். (1207)
அக் கூட்டக்காலை இன்பத்தை ஒருபோதும் மறத்தல் அறியேனாய் இன்று அதை நினைக்கும் போதுகூட, பிரிவுத் துன்பம் என் உள்ளத்தைச் சுடுகின்றதே! இனி, அதை அடியோடு மறந்துவிடின் நான் என்ன நிலைமை அடைவேனோ! இறைவன் தான் அறிவான்.
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு. (1208)
யான் தம்மை எவ்வளவு நினைத்தாலும் அது பற்றிச் சினங்கொள்ளார். அவ்வளவு பெரிதன்றோ காதலர் எனக்குச் செய்யுஞ் சிறந்த இன்பம்!
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. (1209)
முன்பெல்லாம் ‘நாம் இருவரும் வேறு அல்லம்’என்று சொல்லுவாரின் அன்பின்மையை மிகவும் நினைந்து எனது இனிய உயிர் இன்று என் உடம்பை விட்டுப் பெயர்கின்றது.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
நிலாவே! என் நெஞ்சில் இடைவிடாது இருந்தே விட்டுப்போன என் காத லரை நான் என் கண்ணளவாயினுந் தலைக்கூடும் வகை, நீ மேற்றிசை யில் மறையாது இருப்பாயாக. நீ ( அங்ஙனஞ் செய்யின்) நீடு வாழ்க!

No comments:
Post a Comment