44. குற்றங்கடிதல்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. (431)
அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரின் செல்வம் மேம்பாட்டுத் தன்மையையுடைத்து.
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. (432)
செலவிட வேண்டிய வகைக்குச் செலவிடாத கடும்பற்றுள்ளமும், தவறான தன்மானமும், அளவிறந்த மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாம்.
திணைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். (433)
பழிக்கு அஞ்சுவார் தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை. (434)
தனக்கு அழிவை உண்டாக்கும் பகை தன் குற்றமே. ஆதலால் தன்னிடத்துக் குற்றம் வராமையையே பொருட்டாகக் கொண்டு காத்துவருக.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (435)
குற்றம் நேர்வதற்கு முன்பே அதை அறிந்து தடுக்காத அரசனுது வாழ்க்கை, அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர் போல அழிந்துவிடும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு? (436)
முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக் காண வல்லனாயின் அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது? ஒன்றுமில்லை.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். (437)
பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் பாதுகாப்பும் பற்றிச் செய்ய வேண்டியவற்றைச் செய்துகொள்ளாது, அதனிடத்துப் பற்றுள்ளம் வைத்த அரசனின் செல்வம், அழிவிற்குத் தப்பி எஞ்சியிருக்குந் தன்னை யின்றி வீணே கெடும்.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை ஏற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. (438)
பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது தன்னுடனேயே வைத்துக் கொள்ளுமாறு, உள்ளத்தால் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை பிற குற்றங்க ளோடு சேர்ந்து எண்ணப்படாது தனியாக வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும்.
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (439)
அறிவு ஆற்றல்களிலும் இடம் பொருள் ஏவல்களிலும் தான் மிகவுயர்ந்த போதும் தன்னை மெச்சிச் செருக்குறா தொழிக. தனக்கும் தன் நாட்டிற்கும் நன்மை தராத செயல்களை மானத்தினாலேனும் செருக்கினாலேனும் இன்பங்கருதியேனும் விரும்பாதொழிக.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். (440)
ஒருவன் தான் பித்துச் கொள்வது போலும் பெருவிருப்புக் கொண்ட பொருட்களையும் துறைகளையும் தன் பனைவர்க்குத் தெரியாதவாறு நுகரவும் கையாண்டு இன்புறவும் வல்லவாயின் அப்பகைவர் தன்னை வஞ்சித்ததற்குத் செய்யுஞ் சூழ்ச்சி ஏதும் பயனற்றதாய்ப் போம்.

No comments:
Post a Comment