37. அவா வறுத்தல்
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. (361)
எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பை விளைவிக்கும் வித்து அவா என்று சொல்வர் மெய்ப்பொருள் நூலார்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)
பிறப்பெல்லாந் துன்பமாதலை அறிந்தவன் ஒன்றை விரும்பின் பிறவாமையைத் தான் விரும்புவான். அப்பிறவாமை ஒரு பொருளின் மேலும் ஆசை கொள்ளா மையை விரும்பி மேற்கொள்ளின் அவனுக்குத் தானே வந்து சேரும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில். (363)
ஒரு பொருளின் மேலும் ஆசை கொள்ளாமை யயாத்த சிறந்த செல்வம் இம் மண்ணுலகத்தில் இல்லை. இனி இதனினுஞ் சிறந்ததாகச் சொல்லப்பெறும் விண் ணுலகத்திலும் அதையயாப்பது ஒன்றுமில்லை.
தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். (364)
ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவா இல்லா மையாம். அவ்வவா இல்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும்.
அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர். (365)
பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு ஏதுவாகிய அவா அற்றவரேயாவர். அவா முற்றும் அறாது சில பொருள்களின் மேல் மட்டும் ஆசையற்றவர் அவற்றால் வருந் துன்பங்கள் அற்றதல்லது பிறவியற்றவர் ஆகார்.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. (366)
அருளுடைமை முதல் மெய்யுணர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட எல்லாத் துறவறங் களையுங் கடைப்பிடித்து வீடுபெறும் நிலையிலுள்ள ஒருவனை யும், சோர்வு கண்டு புகுந்து மீண்டும் பிறப்பின்கண் வீழ்த்திக் கெடுக்க வல்லது அவாவாம். ஆதலால் அவ் வவாவிற்கு அஞ்சி அது நேராதவாறு காத்துக் கொள்வதே இறுதியில் மேற்கொள்ள வேண்டிய அறமாம்.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். (367)
ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதை முற்றுங் கெடுக்க வல்லனாயின் அவன் கெடா மைக்கு ஏதுவாகிய வினை அவன் விரும்பியவாறே உண்டாகும்.
அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)
அவா இல்லாதார்க்கு அதனால் வருந்துன்பமும் இல்லை. அது இருப்பின் ( அது உள்ளவர்க்கு) அதனால் எல்லாத் துன்பங்களும் விடாது வந்துகொண்டே இருக்கும்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். (369)
அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின் அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமின்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்றவிடத்தும் இன்பம் இடை விடாது தொடரும்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். (370)
ஒரு போதும் நிரம்பாத இயல்பையுடைய அவாவை ஒருவன் விடுவானாயின் அவ் விடுகை அப்பொழுதே அவனுக்கு ஒருகாலும் மாறாத இயல்புடைய பேரின்பத்தைத் தரும்.
வீட்டியல் முற்றிற்று.

No comments:
Post a Comment