Thursday, December 26, 2019

87. பகை மாட்சி

87. பகை மாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. (861)

தம்மினும் வலியார்க்குப் பகையாய் எதிர்த்தலைத் தவிர்க. மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக.

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு? (862)


தன் சுற்றத்தின்மேல் அன்பு இல்லாதவனாகவும் சிறந்த துணை இல்லா தவனா கவும் அவற்றோடு தானும் வலிமை இல்லாதவனாகவும் உள்ள ஒருவன் தன்மேல் வந்த பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப் பான்?

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. (863)


அறிய வேண்டியவற்றை அறியாதவனாகவும் ஈகைத் தன்மை இல்லாத வனாகவும் இருப்பவன் தன் பகைவர்க்கு மிக எளியனாவன்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (864)


சினத்தை விடாதவனாகவும் அடக்கம் இல்லாதவனாகவும் இருப்பவன் மேற் செல்லுதல் எக்காலத்தும் எவர்க்கும் எளிதாம்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது. (865)


வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்து அறியாதவனாகவும் தப்பாது வாய்க்கும் வினைகளை மேற்கொள்ளாதவனாகவும் தீயன செய்யின் தனக்கு வரும் பழியைக் கருதாதவனாகவும் பிறர் இயல்பை அறிந்து அதற்கு ஏற்ப நடக்கும் நற்குணம் இல்லாதவனாகவும் இருப்பவனது பகை அவன் பகைவர்க்கு இனி தாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். (866)


செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாரா மைக்கு ஏதுவான கடுஞ்சினத்தனாகவும் கரை கடந்த பெண்ணாசை யனாகவும் இருப்பவ னது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.

கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. (867)


போரைத் தொடங்கி அண்மையில் இருந்துகொண்டு தனக்குத்தானே மாறான வற்றைச் செய்வான் பகையை, அவன் விரும்பிய பொருளை விலையாகக் கொடுத்தாயினும் உறுதியாகப் பெறல் வேண்டும்.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்(கு)
இனனிலனாம் ஏமாப் புடைத்து. (868)


ஒருவன் குணம் ஒன்றும் இல்லாதவனாய் அவனிடத்து உள்ள குற்றங்கள் மட்டும் பலவாய் இருப்பின் அவன் துணை இல்லாதவனாவன். அந்நிலை மை அவன் பகைவர்க்கு அரண் ஆதலையுடைத்து.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். (869)


அரசியல் அறிவு இல்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால் அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றி இன்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா.

கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. (870)


அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தலால் வரும் எளியவழிப் பொரு ளோடு பொருந்தாதவனை, ஒருபோதும் புகழ் பொருந்தாது.

No comments:

Post a Comment