Thursday, December 26, 2019

124. உறுப்புநலன் அழிதல்

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். (1231)


இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காத லரை நினைத்து நீ அழுதலால் உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண். (1232)


பசலை அடைதல் மேலும் நீர்வடியும் உன் கண்கள், நம்மால் விரும்பப் பட்டவர் அன்பு செய்யாமையைப் பிறருக்குச் சொல்வன போல் ஆகின் றன. ஆதலால் நீ ஆற்றல் வேண்டும்.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (1233)


காதலர் மணந்த நாளில் மகிழ்ச்சி மிகுதியாற் பூரித்த உன் தோள்கள் இன்று அவர் பிரிந்தமையை விளக்கமாகப் பிறர்க்கு உணர்த்துவன் போல மெலிவடை கின்றன. இது கூடாது.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (1234)


தம் துணைவர் நீங்கியதனால் அவராற் பெற்ற செயற்கை அழகேயன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள் தம் பருமை குன்றிய தனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும்.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியயாடு
தொல்கவின் வாடிய தோள். (1235)


வளையலகளுங் கழன்று பழைய இயற்கை அழகையும் இழந்த இத் தோள்கள், கடடியணைத்த கை சற்று நெகிழினும் ஆற்றாதவன் இத் துணைக் காலம் நீட்டியது என்னவாறு என்று எண்ணாத கொடியவரின் கொடுமையைத் தாமே சொல்கின்றன.

தொடியயாடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. (1236)


யான் ஆற்றியிருக்கவும் என்வயப்படாது கடகங்கள் கழலுமாறு தோள்கள் மெலிய, நீர் அவற்றைக் கண்ட அளவில் காதலரைக் கொடியர் எனக் கூறு தலைப் பொறாது உள்ளே நோகின்றேன்.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து. (1237)


என் உள்ளமே இவள் கொடியார் என்கிறவரிடம் நீ சென்று என் மெலி கின்ற தோள்களினால் ஏற்படும் ஆரவாரத்தைச் சொல்லி ஒரு மேம்பாடு பெறுவாயோ? பெறின் அதைப் போற் சிறந்தது ஒன்றில்லை.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (1238)


தன்னை இறுகக் கட்டித் தழுவிய கைகளை இவட்கு நோமென்று கருதி ஒரு சிறிது தளர்த்தேனாக. அதற்குள், அச்சிறு தளர்ச்சியையும் பொறாது, பசும்பொன் வளையல்களை அணிந்த என் இளங்காதலியின் நெற்றி பசலை பாய்ந்துவிட்டது. அத்தகைய மெல்லியல் நெற்றி இப்பிரிவிற்கு யாதாகுமோ?

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (1239)


அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்கும் இடையே ஒரு சிறு தென்றற் போத்து நுழைந்ததாக அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங்காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலைய டைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையும் ஆகிய மாபேரிடையீடுகளை எல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ!

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. (1240)


தென்றற் காற்று இடையிற் புகுந்ததனால் வந்த கண்ணின் பசலையோ தனக்கு அயலில் உள்ள ஒளிபொருந்திய நெற்றி பசந்தது கண்டு துன்பம் அடைந்தது.

No comments:

Post a Comment