79. நட்பு
செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு? (781)
நட்பைப் போல் அமைத்துக் கொள்வதற்கு அரிய உறவுகள் வேறு எவை உள்ளன? அதை அமைத்துக் கொண்டால், எடுத்துக்கொண்ட வினை முயற்சிக்குப் பகைவரால் கேடுவராமற் காத்தற்கு அதைப்போல் அருமை யான காவல்கள் வேறு எவை உள்ளன?
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. (782)
அறிவுடைய மேலோர் நட்புகள் வளர்பிறைத் தன்மை உடையனவாய் மேன்மேலும் வளர்ந்து வருவனவாம். அறிவில்லாத கீழோர் நட்புக்கள் தேய்பிறைத் தன்மை உடையனவாய் வரவரத் தேய்ந்து வருவனவாம்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)
பண்பட்ட மேலோர் தம்முட் செய்யும் நட்பு பழகப் பழக, சிறந்த நூல் கற்கக்கற்கக் கற்றார்க்கு இன்பந் தருவதுபோல் இன்பஞ் செய்வதாம்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (784)
ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்வது தாம் கூடிப் பேசிச் சிரித்து மகிழ்வ தற்கு அன்று. இருவருள் ஒருவர் தம் அறிவுக் குறைவால் ஏதேனும் வரம்பி றந்த செயல் செய்வா ராயின், அவரை அறிவு நிறைந்த இன்னொருவர் முற்பட்டுக் கடிந்து திருத்தற் பொருட்டே.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். (785)
ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்தற்கு ஒரிடத்தில் கூடுதல் பலகாற் கண்டும் பேசியும் உறவாடுதலும் வேண்டியது இல்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சியே நண்பர் ஆதற்குரிய உரிமையைத் தரும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்(து)
அகநக நட்பது நட்பு. (786)
கண்டவிடத்து அகமின்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பு ஆகாது. அன்பால் உள்ளமும் மலருமாறு நட்பதே உண்மையான நட்பாவது.
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (787)
நண்பன் கேடுதரும் தீய வழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி, நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி, தெய்வத்தாற் கேடு வந்த விடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்து வதே ஒருவனுக்கு நட்பாவது.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (788)
அவையிடை ஆடை அவிழ்ந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று திருத்தி அம் மானக்கேட்டை நீங்குவதுபோல நண்பனுக்குத் துன்பம் வந்து விடத்து அப்பொழுதே சென்று உதவி அதை நீங்குவதே ஒருவனுக்கு உண்மையான நட்பாகும்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (789)
நட்பிற்குச் சிறந்த நிலை எது என்றால் ஒருபோது வேறுபடாது, இயன்ற வழி யயல்லாம் தன் நண்பனுக்கு உதவி அவன் எவ்வகையினுந் தளராத வாறு தாங்கும் உறுதியாம்.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (790)
‘இவர் எமக்கு இத்துணை அன்பினர்; யாம் இவர்க்கு இத்தன்மையேம்’ என்று சொல்லி ஒருவரை ஒருவர் பாராட்டினும் நட்புத் தன் பொலிவு இழக்கும்.

No comments:
Post a Comment