46. சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (451)
பெரியோர், சிறியோர் கூட்டத்திற்கு அஞ்சுவர். சிறியோரோ அக்கூட்டத் தைக் கண்டவுடன் அதைத் தமக்குச் சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்வர்.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்; மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)
நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையதாம். அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாம்.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். (453)
மாந்தர்க்கு இயற்கையாகிய அறிவு அவரவர் மனம் கரணமாக உண்டா கும். ஆயின், இவன் இத்தன்மையன் என்று பிறரால் சிறப்பாகச் சுட்டிச் சொல்லப்படுஞ் சொல் இனம் கரணியமாக உண்டாகும்.
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்(கு)
இனத்துள தாகும் அறிவு. (454)
மேற்கூறிய சிறப்பறிவு ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்ணே உளதா வது போல் தன்னைத் தோற்றுவித்து, உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவதாம்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். (455)
ஒருவனை நல்லவன் என்று சொல்லுதற்கு ஏதுவான உளத்தூய்மையும், செயல் தூய்மையும் ஆகிய இரண்டும் இனத் தூய்மையைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றும்.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்(கு)
இல்லைநன் றாகா வினை. (456)
தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும். தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும்.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும். (457)
மாந்தர்க்கு மன நன்மை ஒரு செல்வமாம். இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும்.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்(கு)
இனநலம் ஏமாப் புடைத்து. (458)
மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக உடையராயினும், அறிவு நிறைந் தோர்க்கு இனநன்மை அரணாகுந் தன்மையுடையது.
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. (459)
ஒருவனுக்கு மன நன்மையால் மறுமையின்பம் உண்டாகும். அதுவும் இனநன்மை யால் வலியுறுதலை உடையதாம்.
நல்லினத்தின் ஊங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். (460)
ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் சிறந்த துணையும் இல்லை தீயினத்திலும் மிகுதியாகத் துன்புறுத்துவதும் இல்லை.

No comments:
Post a Comment