66. வினைத்தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். (651)
ஒருவனுக்குத் துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும். ஆயின், வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லா வற்றை யும் தரும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652)
தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாக உரிய புகழும் விளைக்காத வினைகளைச் எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டுவிடுதல் வேண்டும்.
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். (653)
‘யாம் மேன்மேல் உயர்வேம்’ என்னும் உயர்வு எண்ணங் கொண்டவர், தம் மதிப்புக் கெடுவதற்கு ஏதுவான வினை களைச் செய்யாது விட்டு விடுதல் வேண்டும்.
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். (654)
அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார் தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற் பொருட்டுத் தமக்கு இழிவுதரும் வினைகளைச் செய்யமாட்டார்.
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. (655)
‘ஐயோ! எத்தன்மையான தவற்றை எண்ணாது செய்து விட்டேன்’ என்று பின்பு வருந்துவதற்கு ஏதுவான வினைகளை ஒருபோதுஞ் செய்யா திருக்க. ஒருகால் தப்பித் தவறிச் செய்ய நேர்ந்துவிடின் அதன் பின்பா கிலும் அத்தகைய வினை களைச் செய்யாதிருப்பது நல்லது.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
தன்னைப் பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்தும் வறியன் ஆயினும் அத்தாயின் பசியைத் தணித்தற் பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக.
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை. (657)
அறிவிலாதார் தீவினைகளைச் செய்து அவற்றாற் பழியைத் தம் தலை மேல் ஏற்றுக்கொண்டு பெற்ற செல்வத்தைவிட, அப்பழியை மேற்கொள் ளாத அறிவுடை யோரின் கடுவறுமையே சிறந்ததாம்.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். (658)
அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டு விடாமல் பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு, அவ்வினைகள் ஒருகால் முடிந் தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை. (659)
ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் எல்லாம் இம்மையிலேயே தான் அங்ஙனம் வருந்துமாறு தன்னை விட்டு நீங்கிப்போம். தூய வினைகளால் வந்த பொருள்களோ முன்பு இழக்கப் படினும் பின்பு வந்து பயன்தரும்.
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (660)
அமைச்சன் வஞ்சனையாற் பொருள் ஈட்டி அதனால் அரசனுக்குப் பாது காப்புச் செய்தல், ஈரம் பலராத பச்சை மட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செய்ததனோடொக்கும்.

No comments:
Post a Comment