Thursday, December 26, 2019

94. சூது


94. சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. (931)


தான் வெல்லுந் திறமையும் வாய்ப்பும் உடையன் ஆயினும் சூதாட்டை விரும்பற்க. வென்று பொருள் பெற்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையயன்று கருதி மீன் விழுங்கினாற் போன்றதே.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு? (932)


தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக் கும் மீன் போல், முதல் ஆட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற் றுப் பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகி வாழ்நாள் குன்றி இறக்கும் சூதாடிகட்கும் அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ் வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது.

உருளாயம் ஓவாது கூறின், பொருளாயம்
போஓய்ப் புறமே படும். (933)


ஒருவன் உருள்கின்ற கவற்றொடு சேர்ந்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின் அவன் தேடிய செல்வமும் பொருள் வருவா யும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போய்ச் சேரும்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில். (934)


பல்வேறு இழிவுதருந் துன்பங்களைச் செய்து உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டைப் போலக் கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றும் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். (935)


சூதாட்டும் சூதாடு களமும் சுவறும் உருட்டுங் கைத்திறமும் பற்றிப் பெருமை பாராட்டிப் பற்றுள்ளங் கொண்டு ஆடியவரும் தம் எல்லைச் செல்வமும் இழந்தவர் ஆயினர்.

அகடாரார் அல்லர் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். (936)


சூதாட்டு என்னும் மூதேவியால் ஆட்கொள்ளப்பட்டவர் இம்மையில் வயிறார உண்ணப் பெறார்; மறுமையில் நரகத் துன்பத்தால் வருந்துவர்.

பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். (937)


ஒருவன் அறம் பொருள் இன்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்திற் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின் அது தொல் வரவாகிய பழஞ் செல் வத்தையும் நற்குணங் களையும் நீக்கும்.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. (938)


தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, வெற்றி பெறும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, தோல் வி வருந்தத்தாலும் வென்றவன் மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும்.

உடைசெல்வம் ஊணொளி கல்வியயன் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். (939)


ஒருவன் ஆதாட்டைப் பொழுது போக்காகவோ பொருள் ஈட்டும் வழியா கவோ மேற்கொள்ளின், அவனைப் பெயர் விளங்கலும் கல்வியும் செல்வ மும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர். (940)


பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை மீட்டற் பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின் மேற் பற்று வைக் குஞ் சூதன்போன்றே ஆதன் (ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங் களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மை யதாம்.

No comments:

Post a Comment