113. காதற் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். (1121)
இம்மென்மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் பாலுந் தேனுங் கலந்த கலவை போலும்.
உடம்பொ டுயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையயா டெம்மிடை நட்பு. (1122)
உடம்போடு உயிருக்குள்ள தொடர்புகள் எத்தன்மையன; அத்தன்மை யனவே இப்பெண்ணோடு எனக்குள்ள தொடர்புகளும்.
கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற் கில்லை இடம். (1123)
என் கண்ணின் கருமணியின்கண் தங்கும் பாவையே! நீ அவ்விடத்தை விட்டுப் போவாயாக. ஏனெனின், எம்மால் விரும்பப்படும் அழகிய நெற்றியை உடையாட்கு இருக்க வேறு இடமில்லை.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து. (1124)
ஆய்ந்தெடுத்த அணிகலன்களை உடையாள் என்னோடு கூடுமிடத்து எனக்கு உயிருக்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும். என்னை விட்டுப் பிரியுமிடத்து அதற்கு அதினின்று நீங்கிச் சாதல் போலும்.
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். (1125)
ஒளிபொருந்தியவாய்ப் போர் செய்யுங் கண்ணை உடையாளின் குணங் களை யான் என்றேனும் மறந்தேனாயின் நினைத்திருப்பேன். ஆயின், யான் ஒருபோதும் மறந்ததில்லை ஆதலால் நினைத்ததும் இல்லை.
கண்ணுள்ளிற் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியரெம் காத லவர். (1126)
எம்முடைய காதலர் ஒருபோதும் கண்ணகத்து நின்றும் நீங்கார். யாம் அதை மறந்து ஒருகால் இமைத்தேம் ஆயினும் அதனால் வருத்தமுறார். அத்துணைக் கட்புலனாகாத நுண்மை உடையவர் அவர்.
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து. (1127)
எம் காதலர் எப்போதும் எம் கண்ணுள் இருக்கின்றார். ஆதலால் அவர் மறைவதை அறிந்து கண்ணிற்கு மையிடுதலுஞ் செய்யேம்.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. (1128)
எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் இருக்கின்றார். ஆதலால் அவர் சூடுறுதலை அறிந்து வெம்மையாக உண்ணுவதற்கு அஞ்சுகின்றோம்.
இமைப்பின் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர். (1129)
என் கண் இமைக்குமாயின் உள்ளிருக்குங் காதலர் மறைவதை அறிந்து சிறிது நேரம் இமையாதே இருப்பேன். அவ்வளவிற்கே, என் காதலர் அன்பிலர் என்றும், என்னைத் துயிலா நோயுறுத்தினார் என்றும் பழிதூற் றும் இவ்வூர்.
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர். (1130)
என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்ந்து வதிகின்றார். இதனை அறியாது அவர் அன்பிலர் என்றும், பிரிந்து வேறிடத்து வதிகின்றார் என்றும் பழித்துரைக்கும் இவ்வூர்.

No comments:
Post a Comment