112. நலம் புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரன் யாம்வீழ் பவள். (1111)
அனிச்சப் பூவே! நீ மோப்பக் குழையும் நாணம் உடைமையால் மற்றெல் லாப் பூவினும் நல்ல தன்மையை உடையையாதலால் நீ நீடுவாழ்க! ஆனால், எம்மால் விரும்பப் பட்டவளோ உன்னை விட மெல்லிய தன்மை யுடையவள், இதை இன்று அறிந்துகொள்.
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. (1112)
என் நெஞ்சமே! தாமரை, குவளை முதலிய மலர்களை நீ கண்டால் யான் ஒருவனே காணப்பெற்ற இவள் கண்களை எல்லாராலும் எளிதாய்க் காணப்படும் பொது வகையான அப்பூக்கள் ஒக்கும் என்று கருதி மயங்கி நிற்கின்றாய். உன் அறிவு இருந்தவாறு என்னே!
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (1113)
பசுமூங்கில் போலுந் தோளினை உடையவட்கு, உடம்பு மாந்தளிர் நிற மாயிருக்கும்; பல் வெண்முத்துப் போன்றிருக்கும்; இயல்பான மணம் நறுமணமாயிருக்கும்; மையூட்டிய கண்கள் வேல்போற் கூராயிருக்கும்.
காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. (1114)
குவளைப் பூக்கள் தாம் காணுந் தொழிலை உடையவனாயின் வினைத் திறத்தால் மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடைய இவள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி, அந்நாணத்தினாற் குனிந்து நிலத்தை நோக்கும்.
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (1115)
இவள் தன் இடை மென்மையை நோக்காது அணிச்சப் பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக்கு அணிந்தாள். ஆதலால், இனி இவள் இடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா, அமங்கலப் பறைகளே முழங்கும்.
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். (1116)
விண்மீன்கள் தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாய் இருக்கும். அதனை அறிய மாட்டாது மயங்கித் தம் நிலைமை யினின்றும் பெயர்ந்து அங்குமிங்குத் திரிகின்றன.
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து? (1117)
முன் குறைந்தவிடம் நிரம்பிய விளங்கும் மதியத்திற்குப் போல இப்பெண் ணின் முகத்தில் ஏதேனுங் களங்கம் உண்டோ? இல்லையே! அங்ஙனம் இருந்தும் அவ்விண்மீன்கள் வேறுபாடு அறியாது கலங்கித் திரிவானேன்?
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. (1118)
வெண்ணிலாவே! இப்பெண்ணின் முகம்போலத் தேய்தல் வளர்தல் இன்றியும் களங்கம் இன்றியும் என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்க உனக்கு இயலுமாயின் நீ நீடுழி வாழ்வாயாக! அன்று நீயும் என் காதலை உடையையாய் இருப்பாய்.
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. (1119)
திங்களே! இத்தாமரை மலர் போலுங் கண்ணை உடையாளின் முகத்தை யயாக்க நீ விரும்புவாயானால், இனியாகிலும் எல்லாருங் காணத் தோன் றாதே, நான் மட்டுங் காணத் தோன்று.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)
அறிஞரால் மென்மைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்சமலரும் ஓதிமத்தின் நொய்ய துய்முடியுங்கூட என் காதலியின் மெல்லிய உள்ளங் கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே!

No comments:
Post a Comment