69. தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு (681)
மக்களிடத்து அன்பாய் இருத்தலும் ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற் கேனும் ஆசிரியத் தொழிற்கேனும் ஏற்ற வகுப்பிலும் குடும்பத் திலும் பிறந்திருத்தலும் அரசர் விரும்பத்தக்க சிறந்த தன்மைகள் உடைய னாய் இருத்தலும் தூது சொல்வானுக்கு உரிய இலக்கணங்களாம்.
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்(கு)
இன்றி யமையாத மூன்று. (682)
தம் அரசனிடத்து அன்புடைமையும் தம் வினைக்கு அறிய வேண்டிய வற்றை அறிந்திருத்தலும் செவிக்கும் உள்ளத்தில் இனியனவும் பொருட் கொழுமையுள்ள னவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்து அமைத் துக் கூறும் நாவன்மையும் தூது செல்வார்க்கு இன்றயமையாத மூன்று திறங்களாம்.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. (683)
வேற்படையுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது அரசியல் நூலை அறிந்த வருள் தான் அந்நூலறிவிற் சிறந்தவனாய் இருத்தலாம்.
அறிவுரு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. (684)
இயற்கையான அறிவும் கண்டவர் மதிக்குந் தோற்றப் பொலிவும் ஆராய்ச்சியோடு கூடிய கல்வியும் ஆகிய இம்மூன்று நிறைந்தவன் வேற்றரசரிடம் தூதனாகச் செல்க.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. (685)
வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்ல வேண்டியிருக்கும்போது, மூலவகை யாலும் ஒப்புமை வகையாலும் சுருக்க வகையாலும் தொகுத் துச் சொல்லியும் வெறுப்பான செய்திகளைச் சொல்லுபோது கடுஞ்சொற் களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழ்ச் சொல்லியும் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன்.
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாம் தூது. (686)
அறநூல்களையும் அரசியல் நூல்களையும் கற்று, பகையரசரின் சினப்பார்வைக்கு அஞ்சாது அவர் மனத்திற் பதியுமாறு செய்திகளைச் சொல்லிக் காலத்திற்கு ஏற்பத் தகுந்த வழிகளைக் கையாள்பவனே நல்ல தூதனாவன்.
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (687)
வேற்றரசரிடம் தான் நடந்து கொள்ளவேண்டிய முறைமையை அறிந்து அவரை நல்ல மனநிலையிற் காணுவதற்கு ஏற் சமையம் பார்த்து, தான் வந்த செய்தியைச் சொல்லுதற்கு ஏற்ற இடமும் அறிந்து தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் ஒழுங்காக எண்ணி வைத்து அவ்வாறு சொல்பவன் தலையாய தூதுனாவான்.
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688)
மண் பெண் பொன் என்னும் மூவகை ஆசையும் இன்றித் தூயவனாய் இருந்தலும் வேற்றரசரின் அமைச்சரைத் துணையாக வுடைமையும் சொல்ல வேண்டிய செய்தியை அஞ்சாது சொல்லும் திடாரிக்கமும் இம் மூன்றொடு கூடிய மெய்ம்மையும் தன் அரசன் சொல்லி விடுத்த செய் தியை அவன் சொன்னவாறே வேற்றசரிடம் சென்று தூதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாம்.
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன். (689)
தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுப வன் தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய் தவறியும் தாழ்வான் சொற் களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாய் இருத்தல் வேண்டும்.
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்(கு)
உறுதி பயப்பதாம் தூது. (690)
தான் கூறுஞ் செய்தியால் தன் உயிரிழக்க நேரினும் அஞ்சி விட்டு விடாது தன் அரசன் சொல்லியவாறே வேற்றரசரிடம் செய்தியைச் சொல்லித் தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே சரியான தூதனாவன்.

No comments:
Post a Comment