54. பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (531)
மிகுந்த இன்பக் களிப்பால் வரும் மறதி அரசனுக்கு அளவிறந்த எரிசினத்திலும் தீயதாம்.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (532)
நிலையான வறுமை அறிவைக் கெடுப்பதுபோல மறதி ஒருவனது புகழைக் கெடுக்கும்.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்(து)
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. (533)
கடமை மறந்தொழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை. அவ்வின்மைக் கருத்து அறநூலார்க்கு மட்டுமின்றி உலகத்திலுள்ள எவ்வகை நூலார்க்கும் ஒப்ப முடிந்த முடிபாம்.
அச்சம் உடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534)
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்கு மதில், காடு, மலை முதலிய அரண்கள் இருப்பினும் அவற்றாற் பயனில்லை. அதுபோல மறவியடையார்க்குப் படை செல்வம் முதலிய நலங்கள் இருந்தும் அவற்றாற் பயனில்லை.
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும். (535)
தன்னால் தடுக்கப்பட்ட வேண்டிய துன்பங்கள் அவை வருமுன்பே அறிந்து தன்னைச் காவாது மறந்திருந்தவன், பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்கல் ஆகாமையின் தன் தவற்றை எண்ணி வருந்தி அழி வான்.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில். (536)
அரசர்க்கு மறதியின்மை எவரிடத்தும் எப்போதும் தப்பாது வாய்க்கு மாயின், அது போன்ற நன்மை வேறொன்றும் இல்லை.
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின். (537)
மறவாத மனத்தினால் எண்ணிச் செய்தால், செய்தற்கு அரியன என்று சொல்லப் பட்டு ஒருவருக்கு முடியாத கருமங்கள் இல்லை.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா(து)
இகழ்ந்தார்க் கெழுமையும் இல். (538)
அரசர்க்குச் சிறந்தவை என்று அறநூலாரும் சான்றோரும் உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவற்றைச் செய்யது மறந்தவர்க்கு எழுப்பிறப்பிலும் நன்மையில்லை.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539)
அரசர் தம் மகிழ்ச்சியால் மயங்கும்போது, முன்பு அத்தகைய மயக்கத்தால் தம் கடமையை மறந்து கெட்டவரை நினைத்துப் பார்க்க.
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (540)
அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவறே பெறுதல் எளிதாம், தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.

No comments:
Post a Comment