91. பெண்வழிச் சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. (901)
இன்பம் பற்றி மனைவியை அளவிறந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன்தரும் அறதினைச் செய்யார். இனி இன்பத்திற்கும் அறத்திற்கும் ஏதுவான பொருள் ஈட்டுதலை விரும்பி மேற்கொள்வார், அதற்குத் தடை என்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமை யாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே.
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும். (902)
தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகும் அளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம், தன்பாலர்க்கு எல்லாம் மிகுந்த நாணம் உண்டாகுமாறு தனக்கு வெட்கக் கேட்டை விளைவிக்கும்.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். (903)
ஒருவன் தன் மனைவிக்கு பணியும் ஆண்மையின்மை எப்போதும், அஃது இல்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறக்கும்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று. (904)
தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனது வினைமுயற்சி வெற்றி பெறுவது இல்லை.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)
தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன் தான் தேடிய பொருளைக் கொண்டு நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (906)
தன் மனைவியின் பசுமூங்கில் போலும் தோளிற்கு அஞ்சுபவர் போர் மறத்தால் விண்ணுலக அடைந்த தேவர் போல் இவ்வுலகத்தில் வாழ்ந்தா ராயினும் உயர்ந்தோராற் பாராட்டபெறும் பெருமை இல்லாதவரே.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. (907)
நாணமின்றித் தன் மனைவிக்கு ஏவல் செய்து வாழ்பவனின் ஆண் தன்மையை விட நாணம் உள்ள ஒரு பெண்ணின் பெண்தன்மையே மேன்மை உடையது.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர். (908)
தாம் விரும்பியவாறு அன்றி அழகிய நெற்றியை உடைய தம் மனைவி விரும்பிய வாறே நடப்பவர், தம் நண்பருக்குத் தேவையானவற்றைச் செய்து தீர்க்க மாட்டார். அதோடு மறுமைக்குத் தமக்குத் துணையான அறமுஞ் செய்ய மாட்டார்.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல். (909)
அறச்செயலும் அதைச்செய்தற்கு வேண்டிய பொருள் முயற்சியும் அவ் விரண்டின் வேறான இன்ப நுகர்ச்சிகளும் தம் மனைவிக்கு அடங்கி நடப் பவரிடம் இல்லனவாம்.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். (910)
வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனால் உண்டான செல் வத்தை யும் உடையவர்க்கு மனைவியயாடு கூடுதலால் ஏற்படும் பேதமை ஒருகாலத்தும் உண்டாகாது.

No comments:
Post a Comment