117. படர்மெலிந்து இரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்(கு)
ஊற்றுநீர் போல மிகும். (1161)
இக்காமநோயைப் பிறர் அறியாவாறு யான் மறைப்பேன் ஆயின்; இதுவோ நான் மறைக்க, மறைக்க என் நாண்வரை நில்லாது இறைப்பவர் இறைக்க, இறைக்க ஊறும் ஊற்று நீர்போல மிகுந்து வெளிப்படும்.
கரத்தலும் ஆற்றேனிந் நோயைநோய் செய்தார்க்(கு)
உரைத்தலும் நாணுந் தரும். (1162)
இக்காம நோயை அக்கம்பக்கத்தார் அறியாவாறு மறைக்கவும் என்னால் முடியவில்லை. இனி, இந்நோயை நீக்குமாறு இதைத் தந்த காதலர்க்கு அறிவிக்கவும் வெட்கமாய் இருக்கின்றது. என் செய்வேன்!
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து. (1163)
என் காமநோயும் அதை உண்டாக்கியவர்க்கு உரைப்பதைத் தடுக்கும் நாணமும் அவற்றைத் தாங்காது வருந்தும் உன் உடம்பினிடத்து என் உயிரைக் காவட்டுத் தண்டாகக் கொண்டு அதன் இரு கடையிலுந் தொங்குகின்றன.
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். (1164)
காமக்கடல் எனக்கு இருக்கவே இருக்கின்றது. ஆனால், அதை நீந்திக் கடக்கும் பாதுகாப்பான மரக்கலந்தான் எனக்கு இல்லை.
துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினால் ஆற்று பவர். (1165)
இன்பந் தருதற்குரிய நட்பு நிலைமையிலேயே துன்புறுதலை வருவிப்பவர் துன்பமே தருதற்குரிய பகைமை நிலைமையில் எத்தகையர் ஆவரோ! தெரிகிலது.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. (1166)
காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது, அவ்வின்பம் கடல் போற் பெரிதாம். பின்பு அது தானே பிரிவால் துன்பஞ் செய்யும் போது, அத்துன் பம் அக்கடலினும் பெரிதாம்.
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். (1167)
காமம் என்னுங் கடலை நிறைபுணையாக நான் நீந்தாமல் இல்லை, நீந்தத் தான் செய்தேன், நீந்தியுங் கரைகாணவில்லை; அதனால் மற்று எல்லாருந் தூங்கும் நள்ளிரவிலும் நடுக்கடலில் நானே தன்னந் தனியாக இருந்து அலைசடிப் படுகின்றேன்.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. (1168)
இவ்விரவு இரங்கத்தக்கதாய் இருந்தது. இவ்வுலகத்து மற்று எல்லா உயிர்களையுந் தூங்கவைத்து விட்டதானால், இராமுழுதுந் தூங்காத என்னைத் தவிர வேறொரு துணையும் இல்லாதிருந்தது.
கொடியார் கொடுமையின் தாங்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. (1169)
முன்பு நம் காதலரொடு கூடி இன்புற்ற நாட்களில் எல்லாம் குறியவாய் இருந்த இரவுகள், இன்று அவரினின்று பிரிந்து துன்புறுங் காலத்தில் மிக நீண்டு செல்கின்றனவாய் உள்ளன. ஆதலால், அக்கொடியார் கொடுமை யினும் மிஞ்சிய கொடுமை செய்வனவாகும்.
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீத்தல மன்னோவென் கண். (1170)
என் அகக்கண் போன்றே காதலர் உள்ள நாட்டிற்குக் கடுகிச் செல்ல வல்லன வாயின் என் புறக்கண்கள் இங்ஙனம் வெள்ளம் போலக் கண்ணீர் வடித்து அதில் நீந்தா.

No comments:
Post a Comment