88. பகைத்திறம் தெரிதல்
பகையயன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று. (871)
பகை என்று சொல்லப்படும் தீய குணத்தை ஒருவன் விளையாட்டிற் கேனும் விரும்பத் தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை. (872)
வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டா லும் சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள் ளாது இருக்க.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (873)
தான் துணையின்றித் தனியனாய் இருந்துகொண்டே பலரொடு பகை கொள்பவன் பித்தம் பிடித்தவரினும் பேதையன் ஆவன்.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு. (874)
இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும் பண்பாடு உள்ள அரசனது பெருமையின் கீழ் இவ்வுலகம் அடங்கி நிற்கும்.
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று. (875)
தனக்கு உதவுந் துணை ஒன்றும் இல்லாமலும், தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டு உடையனாகவும் தான் தனியனாகவும் அப்பகை இயிரண்டனுள் தனக்கு இசைந்தது ஒன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாகவேனும் நல்ல துணையாக அமைத்துக் கொள்க.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். (876)
இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்த விடத்து இன்னொரு பகை வனைத் தெளிந்தான் ஆயினும், தெளிந்திலன் ஆயினும் அவனொடு சேரா மலும் அவனை விட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க.
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து. (877)
தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க. வலியின்மை பார்த்திருக்கும் தன் பகைவரிடம் தன் வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. (878)
வினைசெய்யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப்படுத்தித் தற் காப்புஞ் செய்துகொள்ளின் பகைவரிடத்து உள்ள இறுமாப்புத் தானே நீங்கிவிடும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. (879)
களைய வேண்டிய முள்மரத்தைக் கையினால் எளிதாகப் பிடுங்கி எறியும் கன்றுப் பருவத்தே களையாவிடினும், இளமரமாயிருக்கும் போதேனும் வெட்டி விடுக. அங்ஙனம் இன்றி அது முதிர்ந்தபின் களையின், அது தன்னைப் பலர்கூடி வெட்டினும் அவர் கைகளைப் பொறுத்தற்கு அரிய அளவு வருத்தும்.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். (880)
தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை இருந்தும் இகழ்ச்சியால் அதைச் செய்யாது விட்டுவிட்டவர் பின்பு, உறுதியாக மூச்சு விடும் அளவிற்கும் உயிர்வாழ்பவர் ஆகார்.

No comments:
Post a Comment