97. மானம்
இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (961)
செய்யாத விடத்துத் தாம் வாழமுடியாத அளவு முதன்மை வாய்ந்தன எனினும் தன்குடிப் பிறப்புத் தாழ்வதற்கு ஏதுவான இழி செயல்களைச் செய்யா தொழிக.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரோடு
பேராண்மை வேண்டு பவர். (962)
புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர், புகழைச் செய்யும் இடத்தும் தம் குடிப்பிறப்பிற்கு ஒவ்வாத இழிசெயல்களைச் செய்ய மாட்டார்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (963)
குடிப்பிறந்தார்க்கும் தன்மானியர்க்கும் பெருமை நிறைதற்கு ஏற்ற செல்வக் காலத்தில் யாவரிடத்தும் தாழ்மையாய் இருத்தல் வேண்டும். பெருமை குறைதற்கு ஏதுவான வறுமைக் காலத்தில், அக்குறை நிறைத்தற் பொருட்டுத் தாழ்மை இல்லாதிருத்தல் வேண்டும்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. (964)
குடிப்பிறந்த மக்கள் தம் உயர்ந்த நிலையினின்றும் ஒழுக்கக் கேட்டால் தாழ்ந்த விடத்துத் தலையினின்று கழிந்த மயிரை யயாப்பர்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். (965)
குடிப்பிறப்பால் மலை போல் உயர்ந்தோரும் தாம் தாழ்தற்கு ஏதுவான இழி செயல்களை ஒரு குன்றிமணி அளவே செய்வாராயினும் தம் நிலையினின்றுந் தாழ்வர்.
புகழின்றால் புத்தேள்நாட் டுய்யாதால் என்மற்(று)
இகழ்வார்பின் சென்று நிலை. (966)
ஒருவன் தன்மானமின்றித் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று நிற்கின்ற நிலை இவ்வுலகத்து நிற்கும் புகழைத் தராது; மறுமையில் தேவருலகத்திற்குச் செலுத்தாது. இனி அது அவனுக்கு வேறு என்ன பயனைச் செய்யும்?
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. (967)
ஒருவன் தன்னை இகழ்வார் பின்சென்று அவர் தரும் பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்தலினும், தான் பொருளற்ற அப்பொழுதே உயிர் துறந்தான் அல்லது இறந்தான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நன்றாகும்.
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. (968)
உயர்குடிப் பிறப்புத் தன் பெருமிதமாகிய மானங் கெட வந்த விடத்து இறவாது நின்று இகழ்வாரை வேண்டிப் பொருள் பெற்று இழிந்த உடம் பைக் காக்கும் வாழ்க்கை பின்பும் இறவாமல் இருத்தற்கு மருந்தாகுமோ? ஆகாதே!
மயிர்நீப்பின் வாழாக் கவிரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யயாத்த மானியர், தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலைவரின் அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர்.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு. (970)
தமக்கு ஓர் இழிவு வந்தவிடத்து அதைத் தாங்காது உடனே உயிர் நீத்த மானியரின் புகழுடம்பை உலகத்தார் கும்பிட்டு வழுத்துவர்.

No comments:
Post a Comment