83. கூடா நட்பு
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (821)
அகத்திற் கலவாது புறத்திற் கலந்தொழுகுவாரின் நட்பு சிறந்த சமையம் வாய்ப்பின் தாக்குவதற்குப் பட்டடை போல் உதவுவதாம்.
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல் வேறு படும். (822)
இனத்தார் போன்றிருந்து உண்மையில் இனத்தார்க்கு உரிய அன்பு இல்லாத கரந்த பகைவர் நட்பு விலைமகளிர் மனப்போல் வேறுபடும்.
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. (823)
பல நல்ல நூல்களைக் கற்றபோதிலும் சிறவாத பகைவர்க்கு மனந்திருந்தி உண்மை நண்பராகும் தன்மை இல்லை.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824)
காணும் போதெல்லாம் முகத்தில் இனிதாகச் சிரித்து உள்ளத்தில் எப்போதும் தீயவராகிய வஞ்சகருக்கு அஞ்சி விலகிக் கொள்ளல் வேண்டும்.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று. (825)
உள்ளத்தால் தம்மோடு பொருத்தாதவரை எத்தகைய வினையிலும் அவர் சொல்லைக் கொண்டு அவரை நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல்.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். (826)
உண்மை நண்பர் போல் நன்மை பயக்கக் கூடியவற்றைச் சொன்னா ரேனும் பகைவர் சொற்கள் நன்மை பயவாமை விçந்து அறியப்படும்.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். (827)
வில்லின் வளைவாகிய வணக்கம் அதை ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தலால் பகைவரிடத்துத் தோன்றும் பொய்யான பணிவு வணக்கம் தீமையன்றி நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க.
தொழுதகை யுள்ளும் படையயாடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (828)
பகைவரின் குறிப்பு உணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல் படைக் கலம் மறைந்து இருக்கும். அவர் அழுது வடித்த கண்ணீர்க் குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும்.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. (829)
பகைமை தோன்றாவாறு புறத்தில் அளவிறந்து நட்புச் செய்து அகத்தில் தம்மை இழிவாய் எண்ணும் பகைவரைத் தாமும் புறத்தே நட்பாடி அவர் மகிழும் வண்ணம் செய்து அகத்தே அந்நட்புச் சாகும் வண்ணம் பொருந் தும் பான்மை உடையது அரசியன் முறை.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்(டு)
அகநட் பொரீஇ விடல். (830)
தம் பகைவர் தமக்கு நண்பராய் ஒழுகுங் காலம் வரின் தாமும் அவர்மேல் முகத்தால் நட்புச் செய்து அகத்தில் அதைவிட்டு நீங்கிப் பின்பு வேண்டாத போது புறநட்பையும் விட்டுவிடுக.

No comments:
Post a Comment