104. உழவு
சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (1031)
உழவுத் தொழிலால் உண்டாகும் உடல் வருத்தம் நோக்கி வேறு பல் வகைத் தொழில்களைச் செய்து திரிந்தாலும், அதன் பின்னும் வேளாளர் அல்லாத உலகத்தார் எல்லாரும் உழவுத் தொழிலின் வழிப்பட்டவரே. ஆத லால், எல்லா வருத்தமும் உற்றும் உழவுத் தொழிலே உலகில் தலை யாயதாம்.
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா(து)
எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)
உழவுத் தொழிலைச் செய்வார் உலகத்தார் ஆகிய தேர்க்கு அச்சாணி யாவார். அத்தொழிலைச் செய்யும் வலிமை இன்றித் பிறதொழில்களை மேற்கொள்வாரை யயல்லாம் தாங்குதலால்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)
எல்லாரும் உண்ணும் வகை உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உரிமையுடன் வாழ்பவராவர். மற்றோர் எல்லாம் பிறரை வணங்கி அதனால் உண்டு அவர்பின் செல்லும் அடிமையரே.
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)
நெல்லை விளைக்கும் ஈர நெஞ்சத்தாரன உழவர் பல வேற்றரசரின் குடை நிழலின் கீழுள்ள நாடுகளையும் தம் அரசன் குடைக்கீழ்க் கொண்டு வருவர்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)
தம் கையால் உழுது உண்டலை இயல்பாக உடைய உழவர் பிறரிடம் தாம் ஒன்றையும் இரவார். தம்மை இரப்பவர்க்கெல்லாம் அவர் வேண் டியது ஒன்றை இல்லை என்னாது ஈவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை. (1036)
உழவும் தொழிலைச் செய்வாரின் கை அதைச் செய்யாது ஓய்ந்து இருக்குமாயின் ‘மாந்தராற் சிறப்பாக விரும்பப்படும் பெண் ணின்பத்தை யுந் துறந்தேம்’ என்று பெருமை கூறிக்கொள்ளும் துறவியர்க்கும், அவர் அறத்தில் நிற்பது இல்லாமற் போம்.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
ஒரு நிலத்தை உழுதவன் ஒரு பலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வழவடிப் புழுதியைக் காய விடுவானாயின் அந்நிலத்திற் செய்த பயிர் கைப்பிடி எருவுந் தேவையின்றிச் செழித்து வளரும்.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)
பயிர் செய்ய வேண்டிய நிலத்தை ஆழ உழுவதினும், அதற்கு வளமான உரம் இடுதல் நல்லதாம். அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும் போது முற்றுங் களை எடுத்தப் பின் உரிய நாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம்.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். (1039)
நிலத்திற்கு உரிய உழவன் நாள்தோறும் சென்று அதற்கு வேண்டிய வற் றைச் செய்யாது வீட்டிற் சோம்பி இருப்பின், அவன் நன்செய் அல்லது புன் செய், அவனாற் பேணப்படாத மனைவி போலத் தன் னுள்ளே வெறுத்துப் பின்பு வெளிப் படையாகச் சடைத்துக் கொள்ளும்.
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)
‘யாம் பொருள் இல்லேம்’ என்று மனந்தளர்ந்து சோம்பி இருப்பாரைக் கண்டால் நிலமகள் என்னுந் தாய் தனக்குள் சிரிப்பாள்.

No comments:
Post a Comment