59. ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். (581)
ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் ஆகிய இவ்விரண்டையும் அரசன் தன் இரு கண்களாகத் தெளிக.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். (582)
எல்லாரிடத்தும் நிகழ்பவை எல்லாவற்றையும் எப்போதும் ஒற்றால் விரைந்து அறிதல் அரசன் கடமையாம்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்த தில். (583)
ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்து அறியா அரசன் வெற்றி யடையக் கூடிய வேறு வழியில்லை.
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்(கு)
அனைவரையும் ஆராய்வ தொற்று. (584)
அரசியல் வினைஞர், அரசரின் உறவின் முறையார், பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற் செயல் பொருள்களால் மறைவாக ஆராய்வானே சரியான ஒற்றனாவான்.
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585)
ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி, அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத் தொடங்கின் அவர் சினந்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று, எவ்விடத்திலும் எவ்வழியைக்கையாளினும் உள்ளத்தில் உள்ளதை வெளியிடாமை வல்லவனே சிறந்த ஒற்றனாவான்.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்(து)
என்செயினும் சோர்வில தொற்று. (586)
முற்றத்துறந்த முனிவரின் கோலம்பூண்டு புகுதற்கு அரிய இடமெல்லாம் கோடிவரை உட்புகுந்து ஆராய வேண்டியவற்றை யயல்லாம் ஆராய்ந்து அறிந்து அங்குள்ளவர் அயிர்த்துப் பற்றி நுண் சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும் வாய்சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே சிறந்த ஒற்றரா வார்.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று. (587)
ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லவனாகி, தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றல் உள்ளவனே சிறந்த ஒற்றனாவான்.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)
ஓர் ஒற்றன் ஓற்றிவந்து அறிவித்த செய்திகளையும், வேறும் ஓர் ஒற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை அறிந்து கொள்க.
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். (589)
ஒற்றரை ஆளுமிடத்து ஒருவனை யயாருவன் உய்த்துணர்வாலும் அறியாதவாறு தனித்தனி ஆள்க. அங்ஙனம் ஆளப்பெற்ற ஒற்றர் மூவர் கூற்று ஒத்துவரின் அதையே உண்மை என்று தெளிதல் வேண்டும்.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. (590)
அறிதற்கு அரிய மறைப்பொருள்களை அறிந்து வந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, அரசன் பிறர் அறியச் செய்யா தொழிக. செய்தானா யின் தன் உள்ளத்திற் போற்றிக் காக்க வேண்டிய மருமச் செய்தியைத் தானே எல்லார்க்கும் வெளிப்படுத்தினவன் ஆவன்.

No comments:
Post a Comment