108. கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். (1071)
கீழ்மக்கள் வடிவால் முற்றும் மேன்மக்களை ஒத்திருப்பர். அவர் மேன்மக் களை ஒத்திருத்தற் போன்ற ஒப்பை வேறு எந்த ஈரினத்திடையும் யாம் கண்டது இல்லை.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர். (1072)
தமக்கும் பிறருக்கும் நன்மையானவற்றை அறியும் மேன்மக்களிலும் அவற்றை அறியாத கீழ்மக்கள் பேறு பெற்றவராவர். எங்ஙனமெனின், அவை பற்றி அவர் போலத் தம் நெஞ்சத்திற் கவலைப்பட்டு வருந்துவது இல்லை.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். (1073)
கயவர் தேவரையயாத்தவர், அவரும் தேவரைப்போல முழுவுரிமை உடை யவராய்த் தாம் விரும்பியவற்றை யயல்லாம் செய்து முடித்தலால்.
அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ். (1074)
கீழ்மகன், பட்டித் தன்மையில் தன்னினுங் குறைந்தவரைக் கண்டா னாயின், அவ்வொழுக்கத்தில் அவரினும் மேம்பட்டுத் தன் மிகுதிகாட்டி இறுமாந்து நிற்பான்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (1075)
கீழ்மக்களது ஒழுக்கமெல்லாம்,தீயயாழுக்கங் கண்டுபிடிக்கப்படின் அரச னால் தண்டனை வரும் என்று அஞ்சும் அச்சத்தினால் எற்படுவதே, அச்சம் இல்லாத வழியில், தம்மால் விரும்பப்படும் பயன் விளையுமாயின் அதனாற் சிறிது ஒழுக்கம் உண்டாம்.
அறைபறை அன்னர் கயவர் தாங்கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (1076)
தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளைக் கொண்டு சென்று பிறர்க் கெல்லாஞ் சொல்லுதலால், கீழ்மக்கள் விளம்பரஞ் செய்வதற்குக் கொட் டப்படும் பேரிகை யயாப்பர்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. (1077)
தம் அலகைப் பெயர்த்தற்கு வளைந்த கையினையுடையார் அல்லா தார்க்குக் கீழ்மக்கள் தாம் உண்ட எச்சிற் கையில் ஒட்டிய இரண்டொரு பருக்கையையும் உதறி வீழ்த்தார்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படுங் கீழ். (1078)
மேன்மக்கள் வலியாரும் மெலியாரும் சென்று தமக்கு வேண்டியது ஒன்றைக் கேட்ட அளவிற் கொடுத்து உதவுவர். ஆனால், கீழ்மக்களோ, வலியார் சென்று கரும்பை ஆலையில் வைத்து நெரித்துப் பிழிந்தாற் போல, வருத்தி நெருக்கிய போதே ஒன்றை வருந்திக் கொடுப்பர்.
உடுப்பதூஉம் உண்பதூம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ். (1079)
பிறர் தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடை அணி தலையும் அறுசுவை நெய்யுண்டி உண்டலையும் கீழ்மகன் காணுமாயின் அவற் றைப் பொறாது அவரிடத்துக் குற்றம் இல்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக் கூற வல்லவனாம்.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. (1080)
கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியராவர்? ஏதேனும் ஒரு துன்பம் நேர்ந்தவிடத்து அதைச் சாக்கிட்டுத் தம்மை விரைந்து பிறருக்கு விற் றற்கே உரியர்.

No comments:
Post a Comment