84. பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்(டு)
ஊதியம் போக விடல். (831)
பேதைமை என்று சொல்லப்படும் ஒரு குற்றம் என்னது என்று வினவின் தனக்குக் கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு ஆக்கந் தருவனவற்றை விட்டுவிடல்.
பேதைமை யுள்ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல். (832)
பேதைமைக் குற்றங்கள் எல்லாவற்றுள்ளும் கொடியதாவது ஒருவன் தனக்குத் தகாத ஒழுக்கத்திற் பெறவிருப்பங் கொள்ளுதல்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். (833)
வெட்கப்பட வேண்டிய செயல்கட்கு வெட்கப்படாமையும் ஆய்ந்து பார்க்க வேண்டியவற்றை ஆய்ந்து பாராமையும் எவரிடத்தும் அன்பின்மையும் பேணிக் காக்க வேண்டிய எதையும் காவாமையும் பேதை செயல்களாம்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். (834)
அடங்கி ஒழுகுதற்கு ஏதுவான அறநூல்களைக் கற்று அவற்றின் பொரு ளையும் பயனையும் தெளிவாக அறிந்தும் அவற்றைப் பிறர்க்கு விளங்க எடுத்துச் சொல்லி யும் தான் அவற்றின்படி அடங்கி ஒழுகாத பேதை போலப் பேதையார் உலகத்தில் இல்லை.
ஒருமைச் செயலாற்றம் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. (835)
பேதையானவன் எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத் துன்பத்தை இவ்வொருபிறப்புள்ளேயே தேடிக்கொள்ள வல்லவனாம்.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். (836)
செய்யும்வகை அறியாத பேதை ஒரு கருமத்தை ஏற்றுச் செய்யின் அதிற் புரைவிழுதல் மட்டுமோ அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும்.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)
பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ் செல்வம் பெற்றவிடத்துத் தன் னோடு ஒரு தொடர்பும் இல்லாத அயலார் நிரம்ப உண்ணத் தன் குடும்பத் தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கு இன்றிப் பசியோடு இருப் பர்.
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையயான் றுடைமை பெறின். (838)
பேதையானவன் தன் கையில் ஒரு சிறந்த பொருளை உடைமையாகப் பெற்றிருந்தால் அது ஏற்கெனவே பித்துக் கொள்ளியான ஒருவன் அதன் மேலும் கள்ளுண்டு மயங்கினாற் போலும்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். (839)
பேதையானவரின் நட்பு மிக இனியதாம். எங்ஙனம் எனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். (840)
பேதையானவன் அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோர் அவை யின்கண் புகுதல் கழுவித் துப்புரவு செய்யாத காலைத் தெய்வ நிலைய மான கோயிற்குள் வைத்தாற் போலும்.

No comments:
Post a Comment