125. நெஞ்சொடு கிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து? (1241)
என் உள்ளமே! இத்துன்ப நோயைத் தீர்க்கும் மருந்தாவது ஒன்றை எத் தன்மையது ஆயினும் ஒரு முறையை எண்ணி எனக்குச் சொல்ல மாட் டாயா?
காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழியயன் நெஞ்சு. (1242)
என் உள்ளமே நீ வாழ்வாயாக. அவர் நம்பாற் காதல் இல்லாதவராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துவது உன் பேதமையின் விளைவே யன்றிப் பிறிதன்று.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். (1243)
என் உள்ளமே! நீ அவர்பாற் செல்வதுஞ் செய்யாது, இங்கிருந்து கொண்டு அவர் வரவு நினைந்து வீணாக வருந்துவது ஏன்? இத்துன்ப நோயை உண்டாக்கிய வரிடத்துத்தான் நம்மை அன்பாக நினைந்து நம்மிடம் வரக் கருதுதல் இல்லையே!
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையயன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. (1244)
என் உள்ளமே! நீ என் காதலர்பாற் செல்லல் உற்றாயாயின், இக்கண் களையும் உடன் கொண்டு செல். ஏனெனில், நீ தனியாய்ச் செல்வா யாயின், இவை அவரைக் காண வேண்டும் என்னும் பேராவலினால், அவரைக் காட்டச் சொல்லி, என்னைப் பிய்த்துத் தின்றுவிடும்.
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்? (1245)
என் உள்ளமே! யாம் அவர்பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்பு கொள்ளா நம் காதலரை வெறுத்தார் என்று நாம் அவரை விட்டு விலகுதல் நமக்குத் தகுமோ, தகாதே!
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. (1246)
என் உள்ளமே! யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவியின்பங் காட்டி நீக்க வல்ல காதலரைக் காணும்போது வெளித்தோற்றத்திற்காக வேனும் சற்றுப் புலந்து பின்பு அது நீங்கமாட்டாய். அது செய்ய மாட்டாத நீ இன்று அவரைக் கொடியவர் எனக்கூறி வெறுப்பது போல் நடிக்கின் றாய். இந்நடிப்பை விட்டுவிட்டு அவரிடஞ் செல்லத் துணிவாயாக.
காமம் விடுவொன்றே நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு. (1247)
என் நன்மனமே! காமம் நாண் என்னும் இரண்டனுள் ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லாவிட்டால் நாணைவிட்டுவிடு. இவ்விரண்டையும் நீ வைத்துக் கொள்ள விரும்பின், அவ் விரண்டையும் தாங்கும் ஆற்றலோ எனக்கில்லை.
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையயன் நெஞ்சு. (1248)
என் உள்ளமே! அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் இரங்கி வந்து இன்பந் தரார் என்று கருதி, அதை அறிவித்தற்பொருட்டு நம்மை விட்டுப் பிரிந்துபோனவர் பின் ஏக்கங்கொண்டு செல்கின்றாய். நீ என்ன பேதை யாய் இருக்கின்றாய்!
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியயன் நெஞ்சு. (1249)
என் மனமே காதலவர் உள்ளத்தாராய் இருக்கவும் நீ அவரைத் தேடி யாரி டத்துச் செல்கின்றாய்?
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்துங் கவின். (1250)
எம்மைக் கூடாவண்ணம் பிரிந்து போனவரை எம் உள்ளத்து உடையே மாக. முன் இழந்த புறவழகேயன்றி எஞ்சி நின்ற அகவழகும் இழப்பேம்.
No comments:
Post a Comment