81. பழைமை
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (801)
பழைமை என்று சொல்லப்படுவது என்னது என்று வினவின் அது பழை மையான நண்பர் தாம் விரும்பியவாறு செய்தற்கு உரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறைநட்பாம்.
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். (802)
நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை. அதனால் அவ்வுரி மைக்குச் சுவையூட்டுவதுபோல் துணையாதல் அறிவுடையோர் கடமையாம்.
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை? (803)
நெடுங்கால நண்பர் தம் நட்பு உரிமையாற் செய்தவற்றிற்குத் தாமே அவற்றைச் செய்தாற்போல உடம்படாவிடின் பழைமையான அவருடன் வந்த நட்பு என்ன பயன் படுவதாம்?
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின். (804)
பழைமையான நண்பர் தம்மைக் கேட்டுச் செய்ய வேண்டிய ஒரு வினை யைத் தம் உரிமையாற் கேளாது செய்தாராயின் அறிவுடையார் அதன் விரும்பப்படுந் தம்மை பற்றி அவரைத் தமக்கு வேண்டியவராகக் கொள்வார்.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். (805)
பழைமையான நண்பர் தாம் வருந்தத் தக்கவற்றைச் செய்தாராயின் அதற்குக் கரணியம் அவரது அறியாமை மட்டுமன்றி அவர் கொண்ட பேரூரிமையும் ஆகும் என்று அறிந்த பொறுத்துக் கொள்க.
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. (806)
நட்பு வரம்பு கடவாது அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர், பழைமை யாகத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை அவரால் தமக்குக் கேடு வந்தவிடத்தும் விடார்.
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். (807)
அன்போடு கூடிப் பழைமையாக வந்த நட்பையுடையார் தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும் அவர்பால் அன்பு நீங்கார்.
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். (808)
பழைமையான நண்பர் செய்த தவற்றைத் தாமாகவன்றிப் பிறர் சொன்னாலும் பொருட்படுத்தாத நட்புரிமை அறிய வல்லார்க்கு அந்நண்பர் தவறு செய்யின் அந்நாள் நன்னாளாம்.
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. (809)
உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை அவர் செய்த தவறுபற்றி விடாதவரை உலகம் விரும்பும்.
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். (810)
பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர் பகைவராலும் விரும்பப்படுவர்.

No comments:
Post a Comment