103. குடிசெயல்வகை
கருமஞ் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)
தான் பிறந்த குடியை மேன்மேலும் முன்னேற்றும் முயற்சியைக் கை விடேன் என்னும் பெருமை போலச் சிறந்த பெருமை ஒருவனுக்கு வேறொன்றும் இல்லை.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. (1022)
முயற்சியும், நிறைந்த அறிவும் என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடையறாத செயலால் ஒருவனது குடி உயரும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். (1023)
என் குடியை மேன்மேல் உயர்த்தக் கடவேன் என்னும் பூட்கை கொண்டு, அதற்கு ஏற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு உதவி செய்யும் பொருட் டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிகொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும்.
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு. (1024)
தன் குடியை உயர்த்துதற்கு ஏற்ற வினையைத் தவக்கம் இன்றி முயல் வார்க்கு அம்முயற்சி அதற்கு ஏற்ற சூழ்வினை வேண்டாது தானாக வெற்றியாக முடியும்.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (1025)
ஒரு குற்றமுஞ் செய்யாது தன் குடியை உயரச் செய்து ஒழுகுவானை அவன் குடியைச் சேர்ந்தார் அனைவரும், அவனுக்குச் சுற்றமாய் இருத்தலை விரும்பித் தாமே சென்று அவனைச் சூழ்வர்.
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)
ஒருவனுக்குத் நல்ல ஆண்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுந்தன்மையைத் தனக்கு உண்டாக்கிக் கொள்ளுதல், குடியாளுந் தன்மையாவது குடியில் உள்ளவரை முன்னேற்றித் தன்வயப் படுத் துதல்.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)
போர்க்களத்திற்குச் சென்றார் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்பு ஒரு சில கடுமறவர் மேலேயே இருத்தல்போல ஒரு குடியிற் பிறந்தார் பல ராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பு அதைச் செய்யவல்ல ஒரு சிலர் மேலேயே உள்ளதாம்.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
தங்குடியை முன்னேற்றுவார், அத்தொண்டைக் கவனியாது கால நிலைமை நோக்கிச் சோம்பி இருந்துகொண்டு தன்மானத்தையும் பெரி தாய்க் கருது வாராயின், அவர் குடி கெடும். ஆதலால், குடிசெயல் தொண் டர்க்குக் காலவரம்பு இல்லை.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு? (1029)
அடிமைத்தனம், அறியாமை, வறுமை என்னும் மூவகை நிலைமையாலும் தன்குடிக்கு வருந்துன்பங்களை நீக்கப் பாடுபடும் குடிசெயல் தலைவனது உடம்பு துன்பத்தையே இட்டு நிறைந்து வைத்தற்கு ஏற்பட்டதொரு ஏனமோ?
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. (1030)
பக்கத்தில் ஊன்றும் விழுதுபோல் முட்டுக் கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியாகிய ஆலமரம், துன்பம் ஆகிய சிதல் (கறை யான்) தன் அடியை அரித்துத் தின்றுவிட, ஒரு தாங்கலும் இன்றி விழுந்துவிடும்.

No comments:
Post a Comment