75. அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். (741)
இருவகைப்பட்ட பாதுகாப்பு அமைப்பு, மூவகை ஆற்றலும் உடையராய்ப் பிறர் நாட்டின் மேற் படையயடத்துச் சென்று போர் செய்வார்க்கும் சிறந்த செல்வம்; அவ்வாற்றல் இன்றித் தம் பகைவர்க்கு அஞ்சித் தற்காப்புச் செய் வார்க்கும் சிறந்த செல்வம்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். (742)
(மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய அகழிநீரும் அதனை அடுத்த வெறுநிலமும் அதனை அடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும் அதனை அடுத்த பல நீள்மலையும் தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது.
உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். (743)
உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் அருமையும் ஆகிய இந்நான்கு திறமும் அமைந்திருப்பதே சிறந்த மதிலரண் என்று அரசியல் பற்றிய பொருள்நூல் கூறும்.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். (744)
காவல் செய்ய வேண்டிய இடம் சிறிதாய், வாழ்தற்கேற்ப உள்ளிடம் அகன்றதாய், தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் மனவெழுச்சி யைக் கெடுப்பதே சிறந்த கோட்டையரணாவது.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி, அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண். (745)
உழிஞையாராற் கைப்பற்றவதற்கு அரிதாய், உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய் நொச்சிமறவரின் போர் நிலைக்கு எளிதாக நிலைமை உடையதே சிறந்த கோட்டை யரணாவது.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடைய தரண். (746)
அரசனும் படைமறவரும் குடிகளும் ஆகிய அகத்தார் எல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யயல்லாம் உள்ளே கொண்டதாய், நொச்சி மறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருது உதவும் நன்மறவரை உடையதே சிறந்த கோட்டை யரணாவது.
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண். (747)
வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடம் இல்லாவாறு நெருங்கி மதி லைச் சூழ்ந்தும், அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்று திரண்டு முனைந்து பொருதும், அமைச்சரையும் படைத் தலைவரையும் அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெரும்பொருள் கொடுத்து வயப் படுத்திக் கோட்டை வாயிலைத் திறக்கச் செய்தும் உழிஞையாராற் கைப் பற்ற முடியாததே சிறந்த கோட்டையரணாவது.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண். (748)
படைபெருமையால் வளைதல் வல்லவராய் வந்து வளைந்த உழிஞை யாரையும் மதிலரணைப் பற்றி நின்ற நொச்சியார் சிறுபடையினர் ஆயி னும் தாம் பற்றிய இடத்தைவிட்டு அகலாது நின்று பொருது வெல்வதற்கு இடமானதே சிறந்த கோட்டையரணாம்.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். (749)
போர்த் தொடக்கத்திலேயே பகைவர் புண்பட்டு விழுமாறு நொச்சியாரின் வினை வேறுபாடுகளாற் சிறப்புப் பெற்றுப் பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே சிறந்த கோட்டையரணாவது.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண். (750)
கோட்டை அரணமைப்பு மேற்சொல்லப்பட்ட உறுப்புகள் எல்லாவற் றோடுங் கூடி எத்துணை மாட்சிமைப் பட்டதாய் இருப்பினும் போர் வினைச் சிறப்பு இல்லாதவரி டத்துப் பயன்படாததாம்.

No comments:
Post a Comment