120. தனிப்படர் மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. (1191)
தம்மாற் காதலிக்கப்படுங் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர், பெற்றாரன்றோ கொட்டையில்லா நறுமண இன்சுவைச் செழுஞ்சதைக் காமவின்பக் கனி நுகர்ச்சி!
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)
அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்துபோன கணவர் தம்மை இன்றி யமையாத மகளிர்க்கு, காலமறிந்து வந்து இன்புறுத்தும் பேரன்புக் கூட் டம் தன்னையே நோக்கி வாழும் மாந்தருக்கு முகில் காலம் அறிந்து பெரு மழை பொழிந்தாற் போலும்.
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. (1193)
நம் காதலர் பிரிந்தார் ஆயினும் நம்மை நினைந்து விரைந்து வருவர். அதன் பின் இன்புற்று வாழ்வோம் என்னும் மிடுக்கு தாம் காதலிக்குங் கணவராற் காதலிக்கப் பெறும் மகளிர்க்கே அமைவதாம்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். (1194)
கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும் தாம் காதலிக்குங் கணவ ராற் காதலிக்கப்படாராயின் தீவினையாட்டியரே.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை? (1195)
நம்மாற் காதல் செய்யப்பட்டவர், அவ்வாறே தாமும் நம்மிடத்துக் காதல் செய்யாவிடத்து நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்?
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது. (1196)
ஆடவன் பெண்டு என்னும் இருபாலுள் காதல் ஒருதலைக் கண் மட்டும் இருப்பின் அது துன்பந் தருவதேயாம். காவாட்டுச் சுமைபோலே இரு தலையும் அது ஒத்திருந்த விடத்தே இன்பந் தருவதாம்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். (1197)
காமத்தேவன் காமவின்பம் நுகர்தற்கு உரிய இருபாலரிடத்தும் ஒப்பதில் லாது, பெண்பாலாரிடத்து மட்டும் நின்று காதலை உண்டு பண்ணுவான். அவர் பசலை யுற்றும் படர்மிகுந்தும் துன்புறுதலையும் மனம் நோதலை யும் கண்டறியானோ?
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். (1198)
தம்மால் விரும்பப்படும் காதலரிடத்து நின்றும் ஓர் இன்சொல் அளவும் வரப் பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல வன்னெஞ்சர் இவ்வுலகத்தில் வேறொருவரும் இல்லை.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்(டு)
இசையும் இனிய செவிக்கு. (1199)
என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பு இல்லாதவரே ஆயினும் அவரிடத்தினின்று வரும் எத்தகைச் செய்திகளும் என் செவிக்கு இன்பந் தருவன வாம்.
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. (1200)
உன்னோடு உறவு கொள்ளாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்லக் கருதும் நெஞ்சே! அவ்வருஞ் செயலை விட்டுவிட்டு உனக்குத் துயர் விளைக்குங் கடலைத் தூர்க்க முயல்வாயாக. அது உனக்கு எளிது நீ நீடுவாழ்க.

No comments:
Post a Comment