64. அமைச்சு
கருவியுங் காலமுங் செய்கையுஞ் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு. (631)
வினைக்கு வேண்டங் கருவிகளும் அதற்கேற்ற காலமும் அதைச் செய்யும் வகையும் அவ்வகையிற் செய்யும் அரிய வினையும் வெற்றிபெற எண்ணும் ஆற்றலிற் சிறந்தவனே அமைச்சனாவான்.
வண்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ(டு)
ஐந்துடன் மாண்ட தமைச்சு. (632)
மனவுறுதியும் நற்குடிப் பிறப்பும் குடிகளைக் காத்தலும் அறநூல்களையும் அரசியல் நூல்களையும் கற்று வேண்டுவன விலக்குவன அறிதலும் முயற்சியோடு கூடிய ஐங்கூறுகளும் ஒருங்கே சிறப்பாக அமைந்தவனே அமைச்சனாவான்.
பிரிதலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. (633)
போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தலும் தம் துணை வரைத் தம்மினின்று பிரியாவாறு இன்சொல்லாலும் கொடை யாலும் பேணிக் கொள்ளுதலும் முன்பு தம்மினின்றும் தம் துணைவரி னின்றும் பிரிந்து போன வரைத் தேவையாயின் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுதலும் வல்லவனே அமைச்ச னாவான்.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு. (634)
ஒரு வினையைச் செய்யும் வகை பலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந் ததை அல்லது முழுவாய்ப்பாக உள்ளதை ஆராய்ந்து அறிதலும் அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக்கு ஏதுவான வழிகளைக் கையாளுத லும் சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத் தக்கது என்று திட்டவட்டமாகச் சொல்லுதலும் வல்லவனே அமைச்சனா வான்.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லானெஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (635)
அரசியல் அறங்களை அறிந்து தனக்குரிய கல்வி நிறைந்து அடங்கிய சொல்லை உடையவனாய் எக்காலத்திற்கு ஏற்பவும் வினைசெய்யுந் திறன்களை அறிந்தவன், அரசனுக்குச் சூழ்ச்சித் துணையாவான்.
மதிநுட்பம் நுலோடு டையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை? (636)
இயற்கையான நுண்மதியைச் செயற்கையான நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு, சூழ்ச்சிக்கு எட்டாத மிக நுண்ணிய செய்திகளாக எதிர் நிற்பவை எவை உள? எதுவும் இல்லை.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்(து)
இயற்கை அறிந்து செயல். (637)
நூலறிவால் வினை செய்யுந் திறங்களை அறிந்து விடத்தும் உலகியலை அறிந்து அதனொடு பொருந்தச் செய்க.
அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். (638)
அரசன் தன் அமைச்சர் அறிந்து கூறியவற்றை அழித்துத் தானும் அறியா தவனே யாயினும் அக்குற்றம் நோக்கி அவனை அவன் விருப்பம் போல் விட்டுவிடாது அவனுக்கு நன்மையானவற்றை எடுத்துச் சொல்லு தலும் அமைச்சன் கடமையாம்.
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். (639)
நன்மை செய்கிறவன் போல் அருகில் இருந்துக்கொண்டு தீமையை எண்ணும் அமைச்சன் ஒருவனில் அரசனுக்குப் பக்கமாகவே எழுபது கோடிப் பகைவர் அமைவர்.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர். (640)
வினையைச் செய்து முடிக்கும் திறமை இல்லாதவர் செய்ய வேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் செய்யுங்கால் முற்றுப் பெறா தனவாகவே விடுவர்.

No comments:
Post a Comment