Thursday, December 26, 2019

61. மடியின்மை

61. மடியின்மை

குடியயன்னும் குன்றா விளக்கம் மடியயன்னும்
மாசூர மாய்ந்து கெடும். (601)


தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு சோம்பல் என்னும் தூசி அடைவதால் ஒளி மழுங்கிக் கெடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியா வேண்டு பவர். (602)


தாம் பிறந்தகுடியை மேன்மேல் உயரும் நற்குடியாகச் செய்தலை விரும்புபவர் முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினும் முந்து. (603)


அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங் கொண்டொழுகும் அறிவிலி பிறந்த குடி அவனினும் முற்பட அழிந்து போம்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. (604)


சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்வார்க்குக் குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)


நீட்டிக்குந் தன்மை மறதி, சோம்பல், தூக்கம் என்னும் நான்கும் இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பி ஏறும் மரக்கலங்களாம்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. (606)


சோம்பேறிகள், மாநிலம் முழுவதும் ஆளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியி விடத்தும் அதனாற் சிறந்த பயனடைதல் இல்லை.

இடிபுரிந் தெள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்டி உஞற்றி லவர். (607)


சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர், அமைச்சர் கண்டித்து அறிவிரை கூறியும் அதைக் கேளாமையாற் பின்பு அவர் இகழ்ந்து கூறுஞ் சொல்லைக் கேட்பர்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்(கு)
அடிமை புகுத்தி விடும். (608)


சோம்பல் தன்னை குடிசெய்வானிடம் அமையின், அது அவனைத் தன் பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். (609)


ஓர் அரசன், தன் சோம்கல் தன்மையை நீக்கவே, அவன் குடியுள்ளும் ஆண்மை யுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)


சோம்பல் இல்லாத அரசன் கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ஒருமிக்க அடைவான்.

No comments:

Post a Comment