82. தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது. (811)
காதல் மிகுதியால் விழுங்கி விடுவார் போல் தோன்றினும் நற்குணம் இல்லார் நட்பு வளர்தலினுந் தேய்ந்து போதல் நல்லது.
உறின்நட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்? (812)
தமக்கு ஒரு பயனுள்ள விடத்து நட்புச் செய்து அஃது இல்லாத விடத்து நீங்கிவிடும் உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பைப் பெற்றாலும் பெற்றப் பின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடு உண்டு? ஒன்று மில்லை.
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். (813)
நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனை மட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும் கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர்கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து எற்றுக்கொள்ளும் விலைமகளிரும் பிறர் கேட்டையும் அவர் படுந்துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளை மட்டும் நோக்கிக் களவு செய்வாரும் தம்முள் ஒத்தவர் ஆவர்.
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. (814)
போர்வரும் முன்பெல்லாம் தன்னை எந்த நிலைமையிலும் தாங்குவது போன்று இருந்து அது வந்தபின் போர்க்களத்தில் தன்னைக் கீழே தள்ளி விட்டு ஒடிப்போகும் பயிற்சி இல்லாக் குதிரையை ஒத்தவரின் நட்போடு இருத்தலினுந் தனித்திருத்தல் சிறந்ததாம்.
செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. (815)
பாதுகாப்புத் தரும் என்று கருதிச் செய்து வைத்தாலும் பாதுகாப்பாகாத கீழோரது தீநட்பு பெற்றிப்பினும் பெற்றி இராமையே நல்லது.
பேதை பெருங்கெழீஇ நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். (816)
அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும் அறிவுடையானின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். (817)
தாம் அறிவடையும் வகையினர் ஆகாது சிரித்து மகிழும் வகையினர் ஆதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும் பகைவரால் வருந் துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம்.
ஒல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். (818)
ஆகும் செயலையும் ஆகாதது ஆக்கிக் கெடுப்பவரின் நட்பை அவருக்குச் சொல்லாமலே மெல்ல மெல்லத் தளர விடுக.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. (819)
சொல் ஒன்றுஞ் செயல் ஒன்றுமாய் இருப்பவரின் நட்பு நனவில் மட்டுமின்றிக் கனவில் நினைப்பினும் துன்பந் தருவதாம்.
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)
இல்லத்தில் தனியே இருக்கும்போது அன்பர்போல் நட்பாடி அம்பலத்திற் பலரோடு கூடி இருக்கும்போது பகைவர் போல் பழிகூறுவர் நட்பு எள்ள ளவுந் தன்மை அணுகாதபடி காத்துக் கொள்க.

No comments:
Post a Comment