116. பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. (1151)
தலைவ! நீ எம்மைவிட்டுப் பிரியாமை உண்டாயின் அதை மட்டும் சொல். இனி, நீ பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வாயாயின், அதை நீ வரும் வரை ஆற்றியிருந்து உயிர்வாழ்வார்க்குச் சொல்.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. (1152)
களவொழுக்கக் காலத்தில் நம் காதலர் தழையுங் கண்ணியுங் கொண்டு வந்து நம்மைக் குறையிரந்த பொழுது, அவர் பார்வை கூடப்புணர்ச்சி குறித்தமையால் நமக்கு இன்பந் தருவதாய் இருந்தது. ஆனால் இன்று அப்புணர்ச்சியே நிகழ்ந்து வரவும், அது பிரிவர் என்னும் அச்சத்தைத் தருவதாக உள்ளது. என்னே காமவின்பத்தின் நிலைமாற்றம்!
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். (1153)
உன்னிற் பிரியேன் என்று தாம் உரைத்த சொல்லை மறவாதும், நம் பிரி வாற்றாத் தன்மையை நன்றாக அறிந்தும் உள்ள காதலரிடத்தும் ஓரொரு சமையத்துப் பிரிவு நிகழ்தலால் அவர் இன்சொல்லும் பேரன்புச் செயலும் பற்றி, நம்பாற் பிரியாத அன்புடையார் எனத் தெளியும் உறுதி அரிதாய் இருந்தது.
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு? (1154)
தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாகப் பிரிவராயின் அவரிடத் தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய் என்று நம்பியவரிடத்துக் குற்றம் உண்டோ?
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. (1155)
தோழீ! நீ என்னுயிரைப் பேணிக் காப்பாயாயின், அதற்கு இன்றியமை யாத துணைவராக அமைந்தவரின் பிரிவு நேராமற் காப்பாயாக, பின்பு அவர் செலவழுங்குவார் இன்றிச் சென்றுவிடின், என் உயிருஞ் சென்று விடும். அதன் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம்.
பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. (1156)
என் காதற்பெருக்கையுங் கவவுக்கை இறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன் நின்று தம் பிரிவை உணர்த்தும் வன்னெஞ்சராயின், அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வர் என்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை? (1157)
தலைவன் என்னைவிட்டுப் பிரிந்தமையை அவன் உணர்த்தாமல் தாமே யுணர்ந்து என் முன்கையின் வளைவினின்று கழன்று நின்ற வளையல் களே எனக்கு அறிவியாவோ? நீ அவன் வாய்ச் சொல்லால் அறிவிக்க அறிந்து வந்து எனக்கு அறிவிக்க வேண்டுமோ?
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு. (1158)
மகளிர்க்குக் குறிப்பறிந்து உதுவும் உறவினர் போன்ற தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்தல் துன்பந்தருவதாம். இனி, தமக்கு இனிய காதலரை விட்டுப் பிரிவதோ, அதனினும் மிகத் துன்பந் தருவதாம்.
தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ? (1159)
தீத் தன்னைத் தொட்டாற் சுடுமே யல்லது காமநோய் போலத் தன்னை விட்டு நீங்கினுஞ் சுட வல்லதோ? இல்லையே!
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர். (1160)
பிரிவு உணர்த்திய போது அதற்குடம்பட்டு, பிரியுங்கால் நிகழும் துன்ப நோயைப் பொருட்படுத்தாது, பிரிவு நிகழ்ந்தால் அப்பிரிவையும் பொறுத் துக் கொண்டு அதன் பின்னும் உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலரா வர்!

No comments:
Post a Comment