Thursday, December 26, 2019

47. தெரிந்து செயல்வகை

47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல். (461)


வினை மேற்கொள்ளும் போது அன்று அதனால் அழிவதையும், அழிந்தாற் பின் ஆவதையும், வினை முடிந்தபின் தொடர்ந்து வரும் ஊதியத்தையும் ஓப்பு நோக்கி ஆராய்ந்து தக்கதாயின், தாகாதாயின் விட்டு விடுக.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (462)


தாம் தெரிந்தெடுத்த சூழ்ச்சித் துணையினத்தொடு கூடிச் செய்யத்தகும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் தனிப்பட்ட எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்கு முடித்தற்கு அரிய வினை எதுவும் இல்லை.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)


உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை நோக்கி, இருப்பிலுள்ள முதலையும் இழத்தற்கு ஏதுவான முயற்சியை அறிவுடையோர். மேற்கொள்ளார்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர். (464)


தமக்கு இழிவு என்னும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சும் மானியர், வெற்றியாகும் என்னும் உறுதியில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்.

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு. (465)


அரசன் தன் பகைவரை வெல்லுதற்கு ஏற்ற வழிகளை யயல்லாம் தீர எண்ணாது, அரைக்குறையாய் எண்ணிய அளவில் அவர்மேற் படைய யடுத்துச் செல்லுதல், அவரைப் பாதுகாப்பான நிலைமையில் இருத்தி மேலும் வலியுறச் செய்வதொரு நெறியாம்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். (466)


அரசன் தன் வினைக்குச் செய்யத் தகாதனவற்றைச் செய்யின் கெடுவான். இனி, அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமையானுங் கெடுவான்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)


செய்யத் தக்க வினையையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தொடங்குக. தொடங்கியபின் எண்ணுவோம் என்று கடத்தி வைப்பது குற்றமாம்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (468)


தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி, பின்பு பலர் துணை நின்று கருமங் கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும்.

நன்றாற்றல் உள்ளுந் தவறுஉண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (469)


அவரவர் சிறப்புக் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்யாவிடின் வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத் தும் குற்றம் உண்டாம். (ஆம்புடை-உபாயம்)

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் நம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு. (470)


அரசர் தம் வினைசெய்தற்கண், தம் நிலைமையயாடு பொருந்தாத ஆம்புடைகளை வேற்றரசரிடத்துக் கையாளுவராயின், உயர்ந்தோர் அவற்றை நல்லன என்று ஒப்புக்கொள்ளார். ஆதலால், அவ்வுயர்ந்தோர் இழிவு என்று கருதாவற்றை எண்ணி அறிந்து செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment