80. நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. (791)
நட்பை நிலையாகக் கைக்கொள்ள விரும்பியவர்க்கும் வேண்டியவர்க்கும், ஒருவரோடு நட்புச் செய்தபின் அவரை விட்டு விலகுதல் இயலாது. ஆதலால், ஆராயாது நட்புச் செய்தல் போலக் கெடு தருவது வேறு ஒன்றும் இல்லை.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (792)
ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் நல்லவா என்று பல முறையும் பலவகையாலும் ஆராய்ந்து பாராது அவரொடு செய்து கொள் ளும் நட்பு இறுதியில் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தை உண்டாக்கும்.
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (793)
ஒருவனுடைய குணத்தையும் குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறைவற்ற சுற்றத்தையும் ஆராய்ந்து அறிந்து நல்லது என்று காணின் அவனொடு நட்புச் செய்க.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (794)
உயர்குடியிற் பிறந்து தன்னைப் பற்றி உலகங் கூறும் பழிக்கு அஞ்சு பவனை அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும்.
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல். (795)
நன்மை அல்லாதது செய்தவிடத்துக் கண்டித்து மனம் வருந்துமாறு அறிவுரை கூறி, உலக நடையறிந்து அதன்படி நட்பிற்கும் திறமை உடையவரை ஆராய்ந்து கண்டு அவரொடு நட்புக் கொள்க.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (796)
தீமையாக எல்லாராலுங் கருதப்படும் கேட்டிலும் ஒரு நன்மை உண்டாம். அது என்னவெனின், அக்கேடே தன் நண்பர் எல்லாரின் அன்பையும் நன்றாக அளந்து அறிய உதவும் ஒர் அளவுகோல் என்பதாம்.
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். (797)
ஒருவனுக்கு வரவுப் பேறு என்று சொல்லப்படுவது அறிவிலாதாரோடு தெரியாமற் செய்து கொண்ட நட்பை விட்டுவிட்டு அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம்.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (798)
தம் ஊக்கங் குறைதற்குக் கரணியமான வினைகளைச் செய்யக் கருதாது இருக்க. துன்பக் காலத்திற் கைவிடுவார் நட்பைக் கொள்ளாது இருக்க.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். (799)
ஒருவனுக்குக் கேடு நேர்ந்த காலத்து அவனை விட்டு நீங்குவார் முன்பு அவனோடு செய்த பொய்ந்நட்பு, அவன் தன்னைக் கூற்றுவன் கொல்லுங் காலத்து நினைப்பினும் அவன் உள்ளத்தைத் தீற்போற் சுடும்.
மருவுக மாசற்றார் கேண்மையயான் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. (800)
மேற்கூறிய குற்றம் ஒன்றும் இல்லாதவருடைய நட்பையே பயிலுக. அறியாமை கரணியமாக உள்ளத்தால் பொருந்தாவரொடு செய்து கொண்ட நட்பை அவர் விரும்பியது ஒன்றைக் கொடுத்தாயினும் விட்டு விடுக.

No comments:
Post a Comment