78. படைச் செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்வீர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர். (771)
பகைவீர், இதற்கு முன்பு என் தலைவனது வலிமையறியாது அவனுக்கு எதிர் நின்று போரேற்று, அவன் வேலாற் கொல்லப்பட்டுப் பின்பு நடுக் கல்லில் நின்ற மறவர் பலராவர். ஆதலால், நீவிரும் அவ்வாறு நடுகல்லில் நில்லாது உம் உடலோடு நிற்க விரும்பின், என் தலைவன் எதிரே போரேற்று நிற்றலைத் தவிர்க.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)
காட்டில் ஒடும் முயலின்மேல் தப்பாது எய்த அம்பை ஏந்துவதிலும் திறந்த வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.
பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. (773)
அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண் தன்மை என்று சொல்வர். ஆயினும், அப்பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்துவிடத்து இரங்கி அதை நீக்குதற் பொருட்டு அவர்க்கு உதவி செய் தலை அவ்வாண் தன்மைக்குக் கூர்மை என்று சொல்வர் மறநூலார்.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (774)
தன் கையில் இருந்த வேலைத் தன்மேல் வந்த போர் யானையைக் கொல் லுமாறு எறிந்துவிட்டு, அடுத்து வந்த வெறொரு போர் யானையைக் கொல்ல வேல் தேடித் திரும்பி வருகின்ற யானைகொல்லி மறவன் தன் மார்பில் வைத்திருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்ச்சியடைவான்.
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. (775)
பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்த கண் அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென்று எறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின் அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தல் ஆகு மன்றோ.
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து. (776)
கடந்துபோன தன் வாழ்நாட்களையயல்லாம் எடுத்து எண்ணி அவற்றுள் போரிற் சிறந்த புண்படாத நாட்களையயல்லாம் வீணாகக் கழித்த நாட் களோடு சேர்ப்பான் தூய பொருநன்.
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777)
விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி இங்கு உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர் தம் காலில் மறக்கழலைக் கட்டிக்கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந் தன்மை யதாம்.
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர். (778)
போர்வரின் இறப்பிற்கு அஞ்சாது மகிழ்ந்து போர்களத்திற்குச் செல்லும் மறவர், தம் அரசன் அது வேண்டாம் என்று தடுப்பினும் தம் மறம் தளர்த் தல் இல்லை.
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர். (779)
தாம் கூறின வஞ்சினம் தப்பாதவாறு, தம் குறிக்கோள் நிறைவேறாத வழிச் சாக வல்ல மறவரை அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற்கு உரி யார் இவ்வுலத்தில் யார்தான்!
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா(டு)
இரந்துகோள் தக்க உடைத்து. (780)
படைமறவர், நீண்ட காலமாகத் தமக்கும் தன் குடும்பத்திற்கும். வாழ்வு அளித்துக் காத்த அரசரின் கண்களில் நீர் பெருகுமாறு போர்க்களத்திற் சாகப்பெறின் அச்சாவு இரந்தாயினும் பெற்றுக் கொள்ளும் தகுதி உடையதாம்.

No comments:
Post a Comment