71. குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. (701)
அரசன் கருதிய கருமத்தை அவன் கூறாமலே அவன் முகத்தை நோக்கி அறியவல்ல அமைச்சன் உலகு உள்ள அளவும் ஒருபோதும் வற்றாத கடலைத் தன்னுட்கொண்ட ஞாலத்தில் வாழ்வார்க்கு ஒர் அணிகலமாம்.
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். (702)
ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணர வல்லவனை, வடிவால் மாந்தன் ஆயினும் மதி நுட்பத்தால் தெய்வம் போன்றவன் என்று கருதி, அதற்கு ஏற்ப மதித்துப் போற்றுக.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல். (703)
ஒருவரது முகக் குறிப்பினால் அவரது உள்ளக் குறிப்பை அறியவல்ல அமைச்சரை அரசர் தம் பத்து உறுப்புக்களுள் எதை அவர் வேண்டினுங் கொடுத்துத் தமக்குத் துணையாகக் கொள்க.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (704)
ஒருவர் தம் மனத்திற் கருதியதை அவர் கூறாமலே அறிய வல்லவரோடு மற்றவர் உறுப்பான ஒரு தன்மையராக ஒப்பாரேனும் மதித்திறனாலும் அறிவாலும் வேறு பட்டவராவர்.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்? (705)
பிறர் முகத்திலும் முக உறுப்புக்களிலும் உள்ள குறிப்புக்களைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புக்களைக் காண மாட்டாதனவாயின் ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாக உள்ள ஐம்புல உறுப்புக்களுள் காட்சியையே தம் புலனாகக் கொண்ட கண்கள் வேறு என்ன பயன்படுவனவாம்?
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். (706)
தன்னை அடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட் காட்டும் கண்ணாடி போல ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ? உவப்பினுங்
காயினுந் தான்முந் துறும். (707)
ஒருவர் இன்னொருவரை விரும்பி மகிழ்ந்தாலும், வெறுத்துச் சினந்தாலும் தான் அவற்றை முன்னறிந்து அவற்றைப் பிறர்க்கு அறிவிப்பதில் வாயி னும் முற்பட்டு நிற்றலால் முகத்தைப் போல அறிவுமிக்க வேறு உறுப்பு ஏதேனும் உண்டோ? இல்லை.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். (708)
புறக் குறிப்புகளைக் கருவியாகக் கொண்டு அரசனின் உள்ளத்தை நோக்கி அதிலுள்ள கருத்தை அறியவல்ல அமைச்சரை ஆட்சித் துணை யாகப் பெற்றால், அரசன் அவ்வமைச்சரின் முகத்தை நோக்கி எதிரே நின் றால் போதும். தன் வாய்திறந்து ஒன்றுஞ் சொல்லவேண்டியது இல்லை. அவர் தாமாகச் செய்தி அறிந்து கொள்வர்.
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். (709)
அரசரின் பார்வை வேறுபாடுகள் அறியவல்ல அமைச்சரைப் பெற்றால், அவ்வரசர்க்குப் பிறரோடு உள்ள பகைமையையும் நட்பையும் அவர் கண் களே தெரிவிக்கும்.
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற. (710)
‘யாம் நுண்ணறிவுடையேம்’ என்று தம்மைக் கருதும் அமைச்சர் அரசரின் கருத்தை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து அவ்வரசர் கண்ணன்றி வேறில்லை.

No comments:
Post a Comment