43. அறிவுடமை
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். (421)
நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற் காக்குங் கருவியாம். அதுவுமின்றிப் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணாம்.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (422)
மனத்தை அது சென்ற இடமெல்லாஞ் செல்லவிடாது தீய வழியை நீக்கி நல்ல வழியிற் செலுத்துவது அறிவாம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)
எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் உண்மை யான பொருளைக் காணவல்லது அறிவு.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (424)
பிறருக்குச் சொல்லும்போது அரிய பொருள்களையும் எளிய பொருள் களாக அவர்க்கு விளங்குமாறு சொல்லித் தான்மட்டும் பிறர்வாய்க் கேட்கும் அருஞ் சொற்களின் நுண்பொருளை எளிதாய் அறிந்து கொள்வது அறிவாம்.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. (425)
உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம். அந்நட்பொழுக் கத்தில் வளர்தலுந் தளர்தலும் இன்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவு டைமையாம்.
எவ்வ துறைவ துலகம் உலகத்தோ(டு)
அவ்வ துறைவ தறிவு. (426)
உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ அவ்வாறே அவரொடு பொருந்தி ஒழுகுதல் அறிவுடைமையாம்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். (427)
அறிவுடையார் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னறிய வல்லவர். அறிவில்லா தவர் அதனை முன்னறியும் ஆற்றல் இல்லாதவர்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)
அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம். அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சு வது அறிவுடையார் செயலாம்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (429)
எதிர்காலத்தில் வரக்கூடியதை முன்னரே அறிந்து தம்மைக் காக்கவல்ல அறிவுடை யார்க்கு அவர் அஞ்சி நடுங்குமாறு வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (430)
அறிவுடையார் வேறு ஒன்றும் இலராயினும் எல்லாம் உடையவராவர். அறிவில்லா தவர் பிற எல்லாம் உடையராயினும் ஒன்றும் இல்லாதவ ராவர்.

No comments:
Post a Comment