73. அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (721)
சொல்லின் தொகுதியை அறிந்த தூய மொழிநடையார், கற்றோர் கூடிய வல்லவை, அல்லவை என்னும் இருவகை அவைகளை அறிந்து வல்ல வைக்கண் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தினால் மனந்தடுமாறியும் வாய்தவறியும் வழுப்படச் சொல்லார்.
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். (722)
தாம் கற்றவற்றைக் கற்றார் அவைக்கண் அவர் உளங் கொள்ளும் வகை சொல்ல வல்லவர், கற்றார் எல்லாருள்ளும் நன்கு கற்றவர் என்று கற்றா ரால் உயர்த்துச் சொல்லப்படுவர்.
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர். (723)
போர்களத்துள் அஞ்சாது புகுந்து பகைவரொடு பொருது மறத்தொடு சாக வல்லவர் உலகத்துப் பலர். ஆயின், ஒர் அவையிடத்துப் புகுந்து அஞ்சாது நின்று உரை நிகழ்த்த வல்லவர் சிலரே.
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். (724)
தாம் கற்றவற்றை, அவையல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோர் அவைக்கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி, தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. (725)
வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க.
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு? (726)
மறமுடையார் அல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? அதுபோல, நுண்ணறிஞர் அவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல். (727)
அவைக்கு முன்நின்று அதற்கு அஞ்சி நடுங்குபவன் கற்ற நூல், போர் களத்தில் நின்று போருக்கு அஞ்சும் கோழையன் பிடித்த கூர்வாளை யொக்கும்.
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். (728)
தாம் கற்ற நல்ல பொருள்களை நல்லறிஞர் இருந்த அவைக்கண் தாம் கொண்ட அச்சத்தினால் அவர்க்கு விளங்குமாறு எடுத்துச் சொல்லும் ஆற் றல் இல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன் படாதவரே யாவர்.
கல்லா தவரின் கடையயன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார். (729)
நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்திருந்தும் நல்ல அறிஞர் அவைக்கு அஞ்சி அங்கு அவற்றை எடுத்துக்கூற மாட்டாதார் கல்லாத வரினுங் கடைப்பட்டவர் என்பர் அறிஞர்.
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (730)
தாம் கற்றவற்றை அவைக்கு அஞ்சி அதற்கு ஏற்பச் சொல்ல மாட்டாதார் உடலோடு கூடியுள்ளார் எனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர்.

No comments:
Post a Comment