Thursday, December 26, 2019

129. புணர்ச்சி விதும்பல்


129. புணர்ச்சி விதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.               (1281)
நினைத்த அளவிலேயே உள்ளங் கிளர்தலும் கண்ட அளவிலேயே இன் புறுதலும் காம நுகர்ச்சிக்குரிய காதலன் (அல்லது காதலி) பற்றி உண்டா கும்; குடிப்பிற்கு உரிய கள் பற்றி உண்டாகா.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.                         (1282)
மகளிர்க்குக் காமம் பனையளவாகவும் நிரம்ப உண்டாகுமாயின் அவர் தம் காதலரொடு தினையளவும் ஊடுதலை மேற்கொள்ளாது இருத்தல் வேண் டும்.
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.                        (1283)
நம்மைப் புறக்கணித்துத் தாம் விரும்பியவற்றையே செய்வார் ஆயினும் காதலரைக் காணாது என் கண்கள் அமைகின்ற அல்ல.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு.              (1284)
காதலரைக் காணுமுன் அவர் செய்த தவற்றை நினைத்து அவரோடு ஊடுதலை மேற்கொண்டேன். ஆனால், அவரைக் கண்டவுடன் என் உள் ளமோ அதை மறந்து அவரோடு கூடுதலை மேற்கொண்டு விட்டது.
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.                  (1285)
மற்ற நேரமெல்லாங் காணக்கூடியதாய் இருந்தும், கண்ணிற்கு மை தீட்டும்போது மட்டும் தீட்டுக் கோலைக் காணமுடியாத கண்ணே போலக் கணவரைக் காணாத விடத்தெல்லாம் அவர் தவற்றைக் கண்டிருந்து அவ ரைக் கண்ட விடத்து மட்டும் அதைக் காண இயலாது போகின்றேன்.
காணுங்காற் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.                      (1286)
கணவரை யான் காணும்போது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண் கின்றிலேன். அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளை யல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.               (1287)
தம்மை இழுத்துக்கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் வேகமாய் ஓடுகின்ற வெள்ளத்திற் பாய்வார்போல் ஊடல் நீடு நில்லாமை அறிந்தி ருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்?
இளித்தக்க இன்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.                  (1288)
எங்கட்கு உம்முடைய மார்பு, தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு இழிவு தரத்தக்க தீயவற்றைச் செய்யினும், அவரால் மேன்மேலும் விரும்பப் படுவதாகிய கள்ளுப் போன்றதே.
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.                      (1289)
காம இன்பம் மலரினும் மெல்லியதாகும். அதையறிந்து அதன் மென்மை கெடாது நுண்ணிதாக நுகர்பவர் உலகத்துச் சிலரே.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினுந் தான்விதுப் புற்று.                  (1290)
முன்னொரு நாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ண ளவாக மட்டும் காதலி ஊடி, என்னினும் தான் தழுவல் விதுப்புற்றதினால் அக்கண்ணளவு ஊடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள். அத னால், யான் இத் தன்மையேனாய் ஏங்கி நிற்கவும் விதுப்பின்றி ஊடி நிற் கின்ற இவள் அவளல்லள்.


No comments:

Post a Comment